அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*டெல்லி: ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5 அருகே துப்பாக்கிச் சூடு.
அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

*சீனா விசா - தற்காலிக நிறுத்தம்.

சீனா செல்வதற்காக இணையத்தில் விசா விண்ணப்பிக்கும் முறை தற்காலிக நிறுத்தம். இ- விசா சேவையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அடுத்த நடவடிக்கை.

*சிஏஏ மற்றும் என்ஆர்சி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் லோக் சாபாவில் கடும் அமளி.

*மின்துறை கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவெடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.

*5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் பயப்படத்தேவையில்லை.

மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது- பள்ளிக்கல்வி ஆணையர்.

*சபரிமலை விவகாரம் தொடர்பான மறுஆய்வு மனுக்களை தற்போதைக்கு விசாரிக்கப் போவதில்லை - தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே.

*அசாமில் எண்ணெய் குழாய் வெடித்து நதியில் பரவியதால் கடந்த 3 நாட்களாக பற்றி எரியும் புர்ஹி திஹிங் நதி!

அசாம் மாநிலம் திப்ரூகர் மாவட்டத்தில் துலியாஜன் என்ற பகுதி அருகே நதியில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

புர்ஹி திஹிங் ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆயில் ‌இந்தியா நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழாய்களிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவுகளில் தீ விபத்து ஏற்பட்டு, பயங்கரமான புகையுடன் தீப்பிழம்புகள் எழத் தொடங்கின.

அதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்ததாக கூறும் அப்பகுதி கிராம மக்கள், ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

*ஆழ்துளை கிணறு உச்ச நீதிமன்றம் கேள்வி?:

ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

*குரூப் 2ஏ முறைகேடு -
20க்கும் மேற்பட்டோர் தலைமறைவு:

குரூப் 2ஏ முறைகேடு: தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசுப்பணியில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவு என தகவல்.

தலைமைச்செயலக அதிகாரி உட்பட அரசு ஊழியர்கள் 5 பேர் கைதான நிலையில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவு.

*திமுகவில் உட்கட்சி தேர்தல் வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்

*புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடல்.

வள்ளலார் தினத்தை முன்னிட்டு வருகிற 8-ம் தேதி புதுச்சேரியில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

*விழுப்புரத்தில் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய பரிசோதனை.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார். சீனாவில் இருந்து விழுப்புரம் திரும்பிய இளம்பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை.

*புதுச்சேரி:காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர்  கைது- தப்பியோட முயன்ற போது இருவருக்கும் கை முறிந்தது

*சிவகாசி அருகே 2 நாட்களுக்கு முன் காணாமல் போன 9 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு.

கடந்த வாரம் இதே கிராமத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.

*அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி  சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை.
இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.

*தமிழகம் முழுவதும் மாணவர்கள் கல்வி நிறுவன வளாகங்கள், பொதுச்சாலைகளில் போராட்டங்கள் நடத்த தடை கோரிய வழக்கு.

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் மாணவர்கள் படிப்பு பாதிப்பதாக வராகி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

*டெல்லி, தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு மிரட்டல்.

ஐ.எஸ் ஆதரவாளர்களை கைது செய்வதற்கு பதிலடி தரப்படும் என டெலிகிராம் ஆப் மூலம் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை.

தமிழ்நாடு, பெங்களூரு,டெல்லியில் இதுவரை 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

*"டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும்":

கைது செய்வதோடு, குற்றவியல் நடவடிக்கையும் பாயும்"- அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.

*நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா நீக்கம்.

*டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக காஞ்சிபுரத்தில் 3 பேர் கைது:

தலைமை செயலக ஊழியர் திருஞானசம்பந்தன், காஞ்சிபுரம் பத்திரபதிவு அலுவலர் வடிவு மற்றும் ஆனந்தன்  ஆகியோர் கைது.
சிபிசிஐடி போலீஸாரின் தொடரும் அதிரடி வேட்டை.

*நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் வரும் 5ம் தேதி தீர்ப்பு - கர்நாடக உயர்நீதிமன்றம்.

நித்தியானந்தா ஆன்மீகச் சுற்றுப்பயணத்தில் உள்ளதாக சம்மன் கொடுக்கச் சென்ற விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தகவல்.

*தமிழகத்தை ஆள ரஜினிகாந்தை அனுமதிக்க முடியாது இயக்குனர் பாரதிராஜா.

வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்க முடியாதோ அதே போல் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்கமுடியாது.
நான் ஒரு தமிழ்நாட்டுக்காரன் என ரஜினி சொன்னாலும் அவர் வாழ வந்தவர், தமிழர் இல்லை -பாரதிராஜா.

*குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக காவலர் முத்துக்குமார் கைது.

மனைவி மகாலட்சுமி குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற காவலர் முத்துக்குமார் முறைகேடு செய்தது கண்டுபிடிப்பு; மகாலட்சுமி எழிலகத்தில் உதவியாளராக உள்ளார்.

*கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்.

3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதை அடுத்து மாநில பேரிடராக அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages