அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*கொரோனா பாதிப்பு எதிரொலி. சீனாவில் அவசரநிலை பிரகடனம்-மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலை - சீன அதிபர் ஜிஜின்பிங்.
சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442ஆக அதிகரித்துள்ள நிலையில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார் அதிபர் ஸி ஜின்பிங்.
*இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்.
பிப்.19இல் ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் சரிந்து விழுந்து 3பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
*இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு
கோவையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னிடம் குடியுரிமை சான்று கேட்டால் தான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என்று தெரிவிக்க முடிவெடுத்து விட்டதாகவும், இதையே ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
*கோவை: செட்டிப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். செட்டிப்பாளையம் பை பாஸ் சாலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
*திண்டுக்கல்: நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலய 4-ம் ஆண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
*பாஜக ஆட்சியில் மிகப்பெரும் தொழிலதிபர்களின் ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
யாருடைய கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டது என பாஜக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
*முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது வேளாண் மண்டல சட்டத்திற்கு ஒப்புதல் தந்ததற்கு முதல்வரை சந்தித்து நன்றி கூறினார்
*மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சிடேட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் முடியும் நிலையில் மார்ச் 2 வரை அவகாசம் வழக்கப்பட்டுள்ளது
*மனநிலை பாதிப்பு சிகிச்சை கேட்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி: சிறை அதிகாரி கருத்தை ஏற்று நீதிபதி உத்தரவு
*சிஏஏவால் பாதிக்கப்பட்டோர் பற்றி முதல்வர் கேட்ட போது ஸ்டாலினால் எதுவும் கூற இயலவில்லை:
ஸ்டாலின் ஆதாரத்துடன் கூறியிருந்தால் அதற்கு முதல்வர் ஆதாரத்துடன் பதில் கூறி இருப்பார். சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
*நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் இருந்து 39 ரன்கள் பின் தங்கியுள்ளது.
*இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்.
வழக்கு ஆவணத்தை நசரத்பேட்டை போலீஸ் ஒப்படைத்ததை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு விசாரணை தொடங்கியது.
*"பட்டியலின மக்களை மட்டுமின்றி நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் ஆர்.எஸ்.பாரதி கொச்சைப்படுத்தியுள்ளார்; ஆர்.எஸ்.பாரதியை கண்டிக்காமல் ஸ்டாலின் மௌனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது!".
- அமைச்சர் ஜெயக்குமார்.
*கோவா: இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் -29 கே விமானம் சுமார் 10.30 மணி அளவில் கோவாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருந்து பைலட் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல் தெரிவித்த்துள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
*தங்கச் சுரங்கம் தோண்டப்போவதாக செய்தி பரவிய நிலையில் தாங்கள் வீடற்று வெளியேற்றப்படுவோம் என்று உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பழங்குடிக் குடும்பங்கள் இப்போதே அஞ்சத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
*கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பதற்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.
*நெல்லை: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் தனிப்படை போலீஸ் ஒப்படைத்தது.
வில்சன் கொலை வழக்கு விசாரணைக்காக தக்களையில் தனி அலுவலகம் திறக்க உள்ளது என்ஐஏ. கடந்த மாதம் 8-ம் தேதி களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
*ஆந்திரா: புதையலுக்காக ஆந்திர வனத்துக்கு சென்னை இளைஞர்களை அழைத்துச் சென்ற மந்திரவாதி ஜெயக்குமார் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மந்திரவாதி ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து ஆந்திர போலீசார் தேடி வருகின்றனர்.
*கடலூர் மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் கடலில் மூழ்கி நிவேதினி(22), சச்சின்(25) உயிரிழப்பு - 4 பேர் மீட்பு.
*ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் செயல்படுத்தி வருகிறோம்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றியுள்ளோம். - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
*மதுரை: ஒத்தக்கடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்தார்.
*தமிழகத்தில் பெட்ரோல் - டீசலுக்கு மாற்று எரிபொருள் மார்ச் மாதம் அறிமுகம். மாற்று எரிபொருள், பெட்ரோல்-டீசலை விட 40% விலை குறைவாக இருக்கும் - அகில இந்திய பெட்ரோல் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு.
*2 நாள் பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.
நாளை அகமதாபாத்தில் நடைபெறும் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் அதிபர் டிரம்ப்.
இந்திய பயணம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.
இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன் - இந்தியா புறப்படும் முன் அதிபர் டிரம்ப் பேட்டி.
*தமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வு பெற்றவர்களுக்கு புதிய இடங்கள்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக அபாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment