இதுவரை 1லட்சத்து 22,318 நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி - Agnipuratchi

இதுவரை 1லட்சத்து 22,318 நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Share This

இதுவரை 1லட்சத்து 22,318 நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் சுவாசக்கவசம் அனியுன் நிலை ஏற்ப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா வைரஸ் குறித்து அனைத்துத் துறை அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்ட விரிவான ஆய்வுக் கூட்டம் முதல்வர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது..

பள்ளிகள், தொழில் வளாகங்கள், திரையரங்கம் விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துறை சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் அரிவுருத்தியுள்ளார். சென்னை கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் தனிமை சிகிச்சை பிரிவு (Isolation Ward) உருவாக்க உத்தரவிட்டுள்ளார். இரயில்வே நிலையங்கலில் தூய்மை கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து கொல்வது தொடர்பாக குறும்படம் இன்று மாலைக்குள் வெளியிடப்படும்.

சுகாதாரத்துறை தரப்பில் பயனுள்ள மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வீன் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். சமூக வலைதளத்தில் தவறான தகவல்கள் பறப்பபடுகிறது. தவறான செய்திகளை தொடர்ந்து வெளியிடும் பட்ச்சத்தில் அவர்கள் மீது மக்கள் நல்வாழ்வு துறை தரப்பில் காவலர்களிடம் புகார் அளித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னை கிண்டியில் உள்ளது போல் கொரோனா வைரஸுக்கான பரிசோதனை நிலையம் தேனியில் அமைக்கப்பட்டு வருகிறது. , மேலும் 3 இடங்களில் கொரோனா வைரஸ்ருக்கான பரிசோதனை நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து மாவட்ட அட்சி தலைவர்களுக்கும் தலைமை செயலர், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரிவுருத்தியுள்ளார். வெறும் சோப்பில் கை கலுவினால் மட்டுமே போதுமானது. அனைவரும் சுவாசக்கவசம் அனியுன் நிலை தமிழகத்தில் ஏற்ப்படவில்லை. பொதுமக்கள் சுவாசக்கவசம் அணிந்து வீன் பீதிகளை ஏற்படுத்த வேண்டாம். வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மக்கள் நல்வாழ்வுதுறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வைரசால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சொந்த ஊர்களில் கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசும் வெளியுறவு துறையும் எடுத்துவருகிறது.

தமிழகத்தில் இதுவரை 1லட்சத்து 22,318 நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
சீனா, ஜப்பான், செளத்கொரியா, ஈரான், இட்டாலி ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1088 பேர் வீட்டில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த 5 நாடுகளில் இரு வருரோர்களுக்கு வீசா நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வது எப்படி?

*வீடியோ:-* https://youtu.be/Esln0QPDFy8

உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்லியிருக்கும் தற்காப்பு முறைகள் என்னென்ன?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages