கொடூர கரம் நீட்டும் கொரானா..! மாநில வாரியாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
இந்தியாவில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
சீனாவில் மையம் கொண்டு, உலக நாடுகளை சுழன்றடிக்கும் கொரானா வைரஸ் பீதி, இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் மேலும் 5 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி ஆனதால், கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் இருந்து கொச்சிக்கு தனது பெற்றோருடன் வந்த 3 வயது சிறுமிக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, ஜம்மு, டெல்லி, பஞ்சாப், மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட, கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர் , உறவினர்கள், நண்பர்கள் என தொடர்பில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர், கொரினா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதன்படி, ஹரியானாவில் 14 பேரும், உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் தலா 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் 4 பேரும், ராஜஸ்தான் மற்றும் லடாக்கில் தலா 2 பேரும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம், தெலங்கானா, ஜம்மு- காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவர், கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வது எப்படி?
வீடியோ: https://youtu.be/Esln0QPDFy8
No comments:
Post a Comment