சார்க் நாடுகள் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை. கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகள் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை.
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள "தயாராக இருங்கள், பீதி அடைய வேண்டாம்" என்பதே இந்தியாவின் தாரக மந்திரமாக உள்ளது-கொரோனா குறித்த சார்க் நாடுகள் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி.
கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும்.
கொரோனாவை எதிர்கொள்ள உபகரணங்களுடன் சிறந்த மருத்துவக்குழுவை அமைத்து வருகிறோம்; தேவைப்பட்டால் இந்திய மருத்துவக் குழுவை அண்டை நாடுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்- பிரதமர் மோடி.
வைரஸ் பரிசோதனை கருவிகள் மற்றும் பிற உபகரணங்களுடன் கூடிய மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களை கொண்டு விரைவு மருத்துவ உதவிக் குழுவை உருவாக்கி வருகிறோம்.
தேவைப்பட்டால் சார்க் உறுப்பினர் நாடுகளின் உதவிக்கு அவை அனுப்பப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவிப்பு.
No comments:
Post a Comment