அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் மனைவி பெகோனா கோமஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

* பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா.

கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 41 பேர் தமிழ்நாட்டினர். 41 பேருக்கும் கொரோனா அறிகுறி இருக்க வாய்ப்பு இல்லை; கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தி உள்ளோம் - திருவனந்தபுரம் ஆட்சியர்.

*இத்தாலி மிலன் நகரில் இருந்த 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பினர்: இதில் தமிழகத்தை சேர்ந்த 55 மாணவர்களும் அடங்குவர்.
நாடு திரும்பிய அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் - மத்திய அரசு.

*அண்டை நாடுகளுடனான இந்திய நில எல்லை சீல் வைப்பு.

பாகிஸ்தான் உடனான நில எல்லை இன்று நள்ளிரவு முதல் சீல் வைப்பு.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை.

*மார்ச் 29ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்:

ஸ்டாலின் தலைமையில் மார்ச் 29ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்.
பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழுக் கூட்டம். மார்ச் 7ஆம் தேதி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து கூடுகிறது தி.மு.க. பொதுக்குழு.

*காஷ்மீர் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
காஷ்மீர் அனந்த்நாக்கில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை.

*இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு - சுகாராதரத்துறை அமைச்சகம்.

*திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிப்பு.
கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்.

*நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து, ரூ.2.65 ஆக நிர்ணயம்.

*கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை நாளைமுதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.
- அமைச்சர் கமலக்கண்ணன்

*கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு- துணைவேந்தர் தாஸ்.

*கூடுதலாக 80,56,365 என்-95 முகக் கவசங்கள், சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க உத்தரவு:

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான முதல், 2ஆம் கட்ட பரிசோதனை இலவசமாகவே மேற்கொள்ளப்படும். - மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages