அக்னிப்புரட்சி 11.03.2020 இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி 11.03.2020 இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி 11.03.2020 இன்றைய முக்கிய செய்திகள்.

*நாகை : கீச்சாங்குப்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் கடல் அட்டைகள் பறிமுதல்:

வெளிநாட்டுக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்றவர் தப்பியோட்டம் - கடலோர காவல்படை விசாரணை.

*இத்தாலி விமான நிலையத்தில் தவிக்கும் இந்திய மாணவர்கள்:

கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் இல்லாத‌தால் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு.
தாயகம் திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

*பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு:
பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் Naddine dorries -க்கு  வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு.

பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலக்கம்...!

*கொரானோ வைரஸ் பீதி காரணமாக சென்னை வந்து செல்லும் 10 விமானங்கள் 3-வது நாளாக ரத்து.

*கோலாலம்பூர், சிங்கப்பூர், தோஹா, ஹாங்காங், குவைத்திலிருந்து சென்னை வந்து செல்லும் விமானங்கள் ரத்து.

*கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு.

*இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்.

*மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 35,841இல் வணிகம்.

*தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்ஃடி 34 புள்ளிகள் உயர்ந்து 10,486இல் வர்த்தகம்.

*தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை:

*பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எதுவும் நிலுவையில் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்.

*தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை: பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எதுவும் நிலுவையில் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்.

*பரபரப்பு வீடியோ காட்சி: போதையில் கார் ஓட்டிய நபரால் நான்கு பள்ளி மாணவிகள் உட்பட 5 பேர் காயம்.
 
கேரளா: ஆலப்புழை அருகே மூன்று மாணவிகள் பள்ளி தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் மோதியது.

*வீடியோ:-* https://youtu.be/1lJmBat7Y28

அதற்கு முன்னதாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது இதே கார் மோதியது. கார் மோதிய வேகத்தில் 3 மாணவிகளும் அருகிலுள்ள வாய்க்காலில் வீசப்பட்ட பரபரப்பு காட்சி தற்போது வெளியாகி உள்ளது. காயமடைந்த அனைவரும் தற்போது எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*துபாயில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா அறிகுறி

விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் அறிகுறி கண்டுபிடிப்பு.
திட்டச்சேரியை சேர்ந்த கார் ஓட்டுநரை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது மருத்துவக்குழு.

*கமுதியில் சோலார் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது -  அமைச்சர் தங்கமணி.

காவேரி காப்பாளர் பட்டம் பெற்ற முதல்வருக்கு வாழ்த்துகள்; முதல்வருக்கு காவிரி காப்பாளர் பட்டம் வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி!" - அமைச்சர் தங்கமணி.

*சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.33,472ஆக விற்பனை; ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்து, ரூ.4,184க்கு விற்பனை.

*நியாய விலை கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு - பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்.

*சட்ட பேரவையில் இன்று:

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்." தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

*சென்னை துறைமுகத்திற்குள் கப்பல்கள் நுழைய தடை!":

"கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மார்ச் 31ஆம் தேதி வரை எந்தவிதமான வெளிநாட்டு கப்பலும் சென்னை துறைமுகத்திற்குள் நுழைய தடை!" மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் நடவடிக்கை!

*மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்: டெல்லி கலவரம் பற்றி மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

*புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு. கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை - தனி நீதிபதி மகாதேவன் உத்தரவு.
தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை, கிரண்பேடி தரப்பில் மேல்முறையீடு. மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு தீர்ப்பு.

*எதிர்கட்சிகளின் கூச்சல், குழப்பத்தினால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு....

*"கொரானா சோதனை செய்யும் மையத்தை மாவட்டத்துக்கு ஒன்றாக அதிகரிக்கவேண்டும்."
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்தல்.

*திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு:

என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு.

*பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா?-சட்டப்பேரவை வளாகத்தில் தமிமுன் அன்சாரி திடீர் தர்ணா.

யாருக்கோ பயந்துகொண்டு வாக்கு வங்கியை இழந்து கொண்டிருக்கிறது அதிமுக. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எம்எல்ஏ தமிமுன் அன்சாரி காத்திருப்பு போராட்டம் நடத்திய -மஜக தலைவர் தமிமுன் அன்சாரி.

*எம்.பி-க்களின் சஸ்பெண்ட் வாபஸ்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெற்றார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.

*தமிழகத்தில் நெய்வேலி, ராமநாதபுரம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த விமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

*"தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது"
சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி.
தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பரசன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதில்.

*உலக சந்தையில் 35% விலை குறைவு - இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராகுல்காந்தி.

*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து 33,312 ரூபாய்க்கு விற்பனை.

*சண்டையிட்ட போலீஸ்காரர் பணியிடை மாற்றம்*

பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் A.வனஜா-வை கடலூர் ஆயுதப்படைக்கு மாற்றி விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் உத்தரவு.

(முன்னதாக, ஆய்வாளர் வனஜாவுக்கும், எஸ்ஐ ஒருவருக்கும் இடையே நேற்று காவல்நிலையத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோ:- https://youtu.be/nbzQeQmGVm8 )

*எம்.பி-க்களின் சஸ்பெண்ட் வாபஸ்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெற்றார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.

*காங்கிரசிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

*தமிழகத்தில் நெய்வேலி, ராமநாதபுரம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த விமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages