மார்ச் 22 அன்று யாரும் வெளியே வராதீர்கள். மார்ச் 22ம் தேதி மக்களுக்காக ஊரடங்கு உத்தரவை பின்பற்றவேண்டும்; காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வர வேண்டாம் - பிரதமர் மோடி.
திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது.
கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது.
மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது.
130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
மார்ச் 22ம் தேதி அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் போரின் போது கூட நாடுகள் இந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை - பிரதமர்.
2 மாத காலமாக 130 கோடி இந்தியர்களும் கொரோனா குறித்தே பேசுகின்றனர்.
ஒவ்வொரு இந்தியனும் கொரோனா வைரஸ் குறித்த சரியான தகவல்களை பெறுவது அவசியம்-மோடி.
கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.
கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று மற்றவர்கள் நன்றி சொல்லுங்கள்.
முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும்.
இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது.
தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலை மக்கள் பின்பற்ற வேண்டும்.
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வைரஸ் பரவலை தடுத்திட வேண்டும்.
வீட்டிலேயே இருப்பதன் மூலம் பரவலை வெகுவாக தடுக்க முடியும்.
கூட்டமாக கூடுவதை தவிர்த்திட வேண்டும். மோடியின் அறிவிப்பை பார்க்க அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், ஊடகத்துறையினர் மட்டும் வெளியே வந்து பணிசெய்ய தேவை இருக்கிறது.
கொரோனா குறித்து மோடி முக்கிய உரை: நேரலையில் பார்க்கலாம்...
https://youtu.be/2O3yiTnODvM
No comments:
Post a Comment