இன்று (24.03.2020) இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு - பிரதமர் மோடி.
* நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது
*21நாட்கள் முடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி விடுவோம்.
*உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
*மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.
*ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
*கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
*நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.
*கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
*கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம்.
*வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
*இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்.
*நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை.
*ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி
அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு - பிரதமர் மோடி அறிவிப்பு
*நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.
*கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்கிறது.
*உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். 21 நாட்களை ஆக்கப்பூர்வமாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
*உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் வெளியே சென்றால் கொரோனா உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும்.
கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் என்பது மிக முக்கியம்.
சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவோம்.
- பிரதமர் மோடி.
No comments:
Post a Comment