ஏழைகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வரவேற்கத்தக்கது! - மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவு - Agnipuratchi

ஏழைகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வரவேற்கத்தக்கது! - மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவு

Share This

ஏழைகளுக்கு மத்திய அரசு
நிதியுதவி வரவேற்கத்தக்கது! - மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவு

கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 80 கோடி ஏழை மக்களுக்கு மத்திய அரசு ரூ.1.70 கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வாடும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்!.

அடுத்த 3 மாதங்களுக்கு  ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி, பருப்பு,  ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500, மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது பொருளாதார நெருக்கடியை குறைக்கும்!.

அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வருங்கால வைப்புநிதி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் பங்கையும், உரிமையாளர் பங்கையும் அரசே செலுத்தும் என மத்திய அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!.

வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையில் 75% தொகை அல்லது 3 மாத ஊதியத்தை பணியாளர்கள் முன்பணமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்!.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages