அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

*தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க, விடுமுறை ரத்து நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்படுவது கோயம்பேடு வியாபாரிகளின் கடமை என எடுத்துரைக்கப்பட்டது. முழு அளவில் கூட்டம் சேராமல் தக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோம் என காவல்துறையினர் நம்பிக்கையளித்துள்ளனர்.

*எனவே நாளை மற்றும் நாளை மறுதினம் கோயம்பேடு வணிக வளாகம் முழு அளவில் வழக்கம் போல் இயங்கும்!

*சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள்! பெரும்பாலும் அரியலூர், விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள்.

*மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த திராட்சை லாரியில் பதுங்கி இருந்த 30 தொழிலாளர்களை கிருஷ்ணகிரியில் மடக்கி பிடித்தது காவல்துறை! மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!

*"காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே, பெட்ரோல் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்க வேண்டும்".
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், முதலமைச்சருக்கு கோரிக்கை.
அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் பெட்ரோல் கொடுக்க தயார்.

*ஸீவீக்கி, ஸோமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கான தடை தொடரும்!

*வட்டி வசூலிக்க தடை! தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள், சுய உதவிக் குழுக்கள் கடன் வட்டியை வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடன்தாரர் தன்னை கடன் கொடுத்தவர் துன்புறுத்துவதாக புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு! மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும்!

*உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை- தமிழக அரசு.

*ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருக்கும் இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் மதுபாட்டில்கள் திருட வாய்ப்புள்ளதால் அதை பாதுகாப்பான குடோன் அல்லது கல்யாண மண்டபங்களில் வைத்து பாதுகாக்க டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு.

கல்யாண மண்டபங்களில் வைக்கப்படும் மதுபாட்டில்களை பாதுகாக்க காவல்துறையினர் நியமிக்கவும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*கேரளாவில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 126ஆக உயர்வு - முதல்வர் பினராயி விஜயன்.

*இடைக்கால ஜாமீன் உத்தரவுகளும் , பரோல் உத்தரவுகளும் நீட்டிப்பு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. பாதிப்பு ஏற்பட்டால் அரசு மற்றும் உரியவர்கள் நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.

*கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக  எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் அறிவிப்பு.

*தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களுக்கு முககவசம், சேனிட்டைசர்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

*சென்னை தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிக நிறுத்தம்.

சாதாரண சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வர தேவையில்லை.கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் திடீர் நடவடிக்கை.- சித்த மருத்துவ இயக்குநர் வேண்டுகோள்.

*தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.
தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு -தமிழக சுகாதாரத்துறை தகவல்.

*அரண்மனை ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மலேசியா மன்னர் மற்றும் ராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* கொரோனா எதிரொலி தமிழகத்தில் ஏப்.2 முதல் 15ஆம் தேதி வரை ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.

ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் கூட்டுறவுத்துறை அறிவிப்பு.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 பயணச்செலவுக்காக வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு தேவையான மாஸ்க், கிருமிநாசினிகளை வழங்க வேண்டும்-கூட்டுறவுத்துறை.

*கொரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் 25% இடங்களை ஒதுக்க தமிழக அரசு உத்தரவு.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages