அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
*லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த அதிகாரி உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் கே.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி ராணி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
வீட்டுமனை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜெயந்தி கைது.
நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட போது நெஞ்சுவலி வந்த ஜெயந்தி மருத்துவமனையில் உயிரிழப்பு.
*திருப்பூர் சாலை விபத்தில் 6 பேர் பலி.
சேலத்தில் இருந்து ஊட்டி சென்ற கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழப்பு.
*2019 தேர்தல் பிரசாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை விமர்சித்த விவகாரத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் நடவடிக்கை. நாகர்கோவில் அருகே உள்ள இல்லத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய முயற்சி -கைதாக மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை.
*சென்செக்ஸ், நிஃடி கடும் சரிவு!:
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 27,100 புள்ளிகளில் வணிகம்; தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 7,944 புள்ளிகளில் வர்த்தகம்.
*கொரோனா பாதிப்பு 169 ஆக உயர்வு:
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்வு.
141 இந்தியர்கள், 25 வெளிநாட்டினருக்கு கொரோனா பாதிப்பு -3 பேர் உயிரிழப்பு.
நேற்று 151 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
*பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கி தவிப்பு:
முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் தவிப்பு - இந்திய அரசு உதவி செய்ய கோரிக்கை.
*மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் -அமைச்சர் விஜயபாஸ்கர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை.
அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*மும்பையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று - மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47ஆக உயர்வு.
*கொரோனா எதிரொலி - நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து.
முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாலும், பொதுமக்கள் வெளியில் தேவையின்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்பதற்காகவும் ரயில் சேவைகள் ரதது என தகவல்.
*சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து 30,672 ரூபாய்க்கு விற்பனை. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ 34 ரூபாய் குறைந்து 3,834 ரூபாய்க்கு விற்பனை.
*விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு:
12,552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும்.
மாநில சுய உதவி குழுக்களுக்கு, ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு. சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
*சென்னை: சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் 5 வயது பெண் குழந்தை மாயம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பவரின் மகள் மம்மி குமாரி நேற்று மாயமானார்.
இரயில் நிலையத்தில் தந்தையுடன் சென்ற போது கூட்ட நெரிசலில் சிறுமி மாயம் என தகவல்.
சிறுமி கடத்தப்பட்டாரா? என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை.
*கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி
உத்தரவு.
*தேனி: ஆண்டிப்பட்டியில் 3வதும் பெண் குழந்தையாக பிறந்ததால், எருக்கம்பால் கொடுத்து குழந்தையை கொன்ற தாய். தேனி: ஆண்டிப்பட்டியில் பெண் சிசுக்கொலை; தாய் மற்றும் பாட்டி கைது.
*நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ் சிங் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள், ஆவணங்களை சிபிஐக்கு வழங்க கோரிய வழக்கு:
முகேஷ் சிங் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
*பள்ளிக்கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்! புதிய தேர்வு அட்டவணையை தயார் செய்யும் பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் என தகவல்.
*கொரோனா பாதிப்பு விமான ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்:
கொரோனா பாதிப்பால் அனைத்து இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம் பிடித்தம்.
தன்னுடைய சம்பளத்தில் 25% பிடித்தம் செய்வதாக தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா அறிவிப்பு.
*கோரோனா பாதிப்பு புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள 250 திருமண மண்டபங்களில்; மறு உத்தரவு வரும் வரை புக்கிங் நிறுத்தம். திருமண உரிமையாளர்கள் சங்கம் அவசர கூட்டத்தில் முடிவு.
*வரும் ஏப்ரல்.1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல் - அமைச்சர் காமராஜ் அறிவிப்பு.
*நிர்பயா வழக்கு - மனு தள்ளுபடி:
நிர்பயா குற்றவாளி முகேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு.
தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
*கொரோனா எதிரொலியாக 50% B மற்றும் C பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும்; எஞ்சிய 50% B மற்றும் C பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். - மத்திய அரசு.
*அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு:
ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*ராஜீவ்காந்தி கொலை வழக்கில்; நளினி கைதானது முதல்; விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை உள்ள முழு விவரங்களை அட்டவணையாக ஏப்ரல்.7 இல் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
*நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷய் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் மேல்முறையீடு.
*துப்புரவுத் தொழிலாளர்கள் இனி "தூய்மைப் பணியாளர்கள்" என்று அழைக்கப்படுவர் - சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் அறிவிப்பு.
*தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.
அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு- அமைச்சர் விஜயபாஸ்கர்.
*கொரோனா எதிரொலி: மார்ச் 22ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை விதிப்பு! முதியோர் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல் - மத்திய அரசு!
*டெல்லியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு. பொதுத்தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் தள்ளிவைப்பு.
* விழுப்புரம்:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை 20.03.2020 காலை 8 மணி முதல் 31/03/2020 வரை மேல்மலையனுர் அங்காளம்மன் திருக்கோவிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை, கோவில் ஆகம விதிபடி பூஜைகள் நடைபெறும். கோவிலுக்கு செல்ல பேருந்துவசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
No comments:
Post a Comment