அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*பிரபல நாட்டுப்புற பாடகியும்; நடிகையுமான பரவை முனியம்மா (83) காலமானார்:
சில மாதங்களாக உடல்நலக்குறைவால் இருந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.
*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 14 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.
*இரண்டாவது நாளாக தவிக்கும் மக்கள்.....
டெல்லியில் ஆயிரக்கணக்கில் தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் இயக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது.
தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல மணிக்கு 200 பேருந்துகள் வீதம் இன்று ஆயிரம் பேருந்துகளை இயக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
*கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு. ஏற்கனவே 6 பேர் உயிரிழந்த நிலையில், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த 56 வயது நபர் இன்று உயிரிழப்பு.
அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு.
*கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை.
*பசியால் வாடும் குழந்தைகளையும்,இடம்பெயர்ந்த ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டதா...?: கண்ணெதிரே பெருந்துயரம் நிகழும்போது பிரதமரும், நிதி அமைச்சரும் எதற்காக காத்திருக்கின்றனர்...? - ப.சிதம்பரம் ட்வீட்.
*ஸ்பெயின்: இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்றுவந்த 86 வயது இளவரசி மரியா தெரசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
*பொறுத்தது போதும்! தெருவெங்கும் மக்கள் கூட்டம்! சென்னை உள்ளிட்ட தமிழகமெங்கும்.......!
கடந்த ஐந்து நாள்களாக வீட்டை வெளியே வராத மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன், மட்டன், சிக்கன் கடைகளில் குவிந்துவிட்டனர்.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பல இடங்களில் மக்களை எச்சரிக்கை செய்தனர். ஆம்பூரில் மீன், மட்டன் விற்பனை செய்யும் 7 கடைகளை வட்டாச்சியர் மூடி சீல் வைத்தார்.
கூட்டத்தை கட்டுப்படுத்தி சமூக விலகலை உறுதிப்படுத்தாத கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
*நல்ல தகவல்!
மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் 15 பேர் இன்று பூரண குணமடைந்து இல்லம் திரும்பியுள்ளனர். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
*சென்னையில் வீடு வீடாக மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வு!
சைதாப்பேட்டையில் 54 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி! 60 வயதுக்கு மேலானவர்கள் அவர்களாகவே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுரை!
*மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாராட்டுகள், நீங்களும் கவனமாக இருங்கள்.
கொரோனா மனித குலத்திற்கே சவாலான ஒன்று, கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை உள்ளது, பயப்பட வேண்டாம். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கம் மக்கள் தனிமைப்படுத்துவதே, கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி - கொரோனாவுக்கு எதிரான போரில், இதைவிட்டால் வேறு வழியில்லை - பிரதமர் மோடி.
*முழு ஊரடங்கிலிருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு:
தமிழகத்தில் விவசாயப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடைநீக்கம் - தமிழக அரசு. விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களை இயக்குவதற்கான தடையையும் நீக்கி உத்தரவு.
*தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதால் 11,565 வாகனங்கள் பறிமுதல். தமிழகம் முழுவதும் 144 தடையை மீறியதாக 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு.
ஒரே நாளில் 14,815 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன- காவல்துறை.
*இந்தோனேசியாவில் சிக்கியுள்ள 430 தமிழ் குடும்பங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களை பத்திரமாக மீட்க பிரதமர் மற்றும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்.
*ஏப்ரல். 14 வரை தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை. மின்கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் இணைப்பு துண்டிக்கப்படாது. - அமைச்சர் தங்கமணி.
*தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு.- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.
*ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- தமிழக சுகாதாரத்துறை செயலர்.
*கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 202 ஆக உயர்வு! இன்று ஒரே நாளில் 20 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது!
*பிறமாநில தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும்:
மாவட்ட ஆட்சியர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
பிற மாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி வழங்கவும் உத்தரவு.
ஊழியர் சம்பள பட்டியல் தயாரிக்க கல்வி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 3 நாள் சிறப்பு அனுமதி. மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறலாம்.
*கர்நாடகாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா! கர்நாடகாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்வு!
*தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்தனர்.- அமைச்சர் விஜயபாஸ்கர்.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய இருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த இருவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்- அமைச்சர் விஜயபாஸ்கர்.
*வாடகைக்கு குடியிருப்போர்களிடம் வாடகை கேட்டு தொல்லை தர கூடாது.
வாடகை செலுத்த இயலாத குடும்பங்களுக்கு அரசே செலுத்தும்- டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால்.
*சென்னை, கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை இன்று மதியம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவருடன் துறை அதிகாரிகள் மற்றும் சென்னை பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்கத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
*தமிழகத்தில் முதன் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் கொரோன அறிகுறியுடன் வந்தவர்களுக்கு மருத்துவம் அளித்த பெண் மருத்துவர், அவரது குழந்தை, அவரது தாய், வீட்டு பெண் உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா வெருவி தொற்றியதாக தகவல்.
*தீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள், இத்தகைய நோய் உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்- தமிழக முதல்வர்.
*தீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள், இத்தகைய நோய் உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்- தமிழக முதல்வர்.
*கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவமனைகளை தயார்படுத்தி வருகிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் அரசு சார்பில் 15 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன.
அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சமூக பரவலை தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது - விஜயபாஸ்கர்
No comments:
Post a Comment