அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,981லிருந்து 3,012ஆக உயர்வு; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,270லிருந்து 80,409ஆக உயர்வு.

*அமெரிக்க அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலியை தடை செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல். சீனா உளவு பார்க்கலாம் என்பதால் டிக்டாக்கை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை.

*எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என்பதற்குப் பதில் பொதுத்தேர்வு என தவறுதலாக குறிப்பிட்டு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

எட்டாம் வகுப்புக்கு ஏப்ரல் 2ந் தேதி முதல் 9ந் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று கடந்த 3-ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

இந்த சுற்றறிக்கையால் குழப்பம் நிலவிய நிலையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தனித்தேர்வு என்பதற்குப் பதில் பொதுத்தேர்வு என தவறுதலாக குறிப்பிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் தனித்தேர்வர்களுக்காக ஆண்டுதோறும் இந்த தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

*நாமக்கல் சேந்தமங்கலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.7.98 கோடி மதிப்பில் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறை கல்வித்துறைதான் - முதலமைச்சர் பழனிசாமி.

*விழுப்புரம் மாவட்டத்தில் 4 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்

விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர்கள் உள்பட 4 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்செய்து. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார் அதிரடி உத்தரவு.

விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் ஜோதி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜி விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கும்.

அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பாண்டியன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்துக்கும்,
திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

*டில்லி: உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் தேடப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கைது.

*பயோமெட்ரிக் வருகை பதிவு தற்காலிக தடை - டெல்லி அரசு:

கொரோனா பாதிப்பு எதிரொலி: அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்தது டெல்லி அரசு....

*கொரோனா - பள்ளிகளை மூட உத்தரவு:

டெல்லியில் கொரோனா பாதிப்பால் பள்ளிகளை உடனடியாக மூட உத்தரவு:
அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச் 31ம் தேதி வரை மூடுமாறு அறிவுரை. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவிப்பு.

*சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுடன் இஸ்லாமிய அமைப்பினர் சந்திப்பு.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தமைக்காக கமலுக்கு நன்றி தெரிவித்தனர். உறுதியுடன் நடைபெறும் போராட்டத்தில் வன்முறைக்கு இடமளிக்க கூடாது!" - கமல்

*கொரோனா எதிரொலி - குர்கான், நொய்டாவில் உள்ள பேடிஎம் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இத்தாலியில் இருந்து வந்த ஒரு பேடிஎம் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை.

*புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 56 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் - மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உமா மகேஸ்வரி.

*வடகிழக்கு டெல்லி வன்முறை : இதுவரை 654 முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன - 1820 பேர் கைது: வடகிழக்கு டெல்லி வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.

*பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்:

எல்லை பகுதியான குப்வாராவில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது, இந்திய ராணுவம்.
தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக். ராணுவத்திற்கு இந்தியா பதிலடி என தகவல். இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

*சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர்.

பிரசாந்த், கம்ருதீன், ராஜசேகர், ஜான்சன் ஆகிய 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு.
கடந்த 3ஆம் தேதி தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 ரவுடி கும்பலுக்கு இடையிலான மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதாக போலீசார் விசாரணையில் தகவல்.
தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நீதிமன்றத்தில் சரண்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages