அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
உளவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின் பக்தர்களை அனுப்பி வைத்தனர்.
*கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.
99,001 பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிப்பு. உலகம் முழுக்க 3,356 கொரோனா வைரஸால் பலி, சீனாவில் 3320 பேர் கொரோனா வைரஸால் பலி.
*தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
*கர்நாடகாவில் சாலை விபத்து: 12 தமிழர்கள் பலி.கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 12 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
*இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேர் மாயம் - வெளியுறவுத் துறை தகவல்.
*மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்து 37,470-ல் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 339 புள்ளிகள் குறைந்து 10,929-ல் வர்த்தகமாகிறது.
*தமிழக காவல்துறைக்கு ரூ.95.58 கோடி மதிப்பிலான 2,271 புதிய வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
*கொரோனா எதிரொலி - விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளை ஆய்வு செய்ய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்.
காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இருந்தால் மருத்துவர்களை அணுகவும்.
1,200க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு தனி வார்டு அமைக்க அறிவுறுத்தல் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*ராமநாதபுரம் : தொண்டியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் ராஜலட்சுமி கைது.
ராஜலட்சுமியிடம் சிகிச்சை பெற்ற பெண் இறந்ததையடுத்து போலீசாரின் விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.
*தங்கம் விலை 🚀🚀...... வேகத்தில்
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 109 உயர்ந்து ரூ.4,231க்கு விற்பனை.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.33,848 க்கு விற்பனை.
*அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யலாம் என்ற உத்தரவு நிறுத்தி வைப்பு. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.
*திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு. கைது செய்யலாம் என்று நேற்று உத்தரவிட்ட நிலையில் இன்று நிறுத்தி வைப்பு.
*ரூ.3 கோடி மதிப்பிலான வைர நகைகள் மீட்பு:
சேலம் : சங்ககிரியில் கடந்த மாதம் சொகுசு பேருந்தில் திருட்டு போன ரூ.3 கோடி மதிப்பிலான வைர நகைகள் மீட்பு. தருமபுரியில் நகை கடையில் விற்க முயன்றபோது நகைகள் மீட்பு - குற்றவாளிகள் தப்பியோட்டம்.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31ஆக உயர்வு.
டெல்லியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
*சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் தென்காசி மாவட்டம் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்.
*நாட்டு வெடிகுண்டு சம்பவம் -3 பேர் சரண்:
சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்- தென்காசியில் 3 பேர் சரண்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சதீஷ், ஹரீஸ், தமிழ்செல்வன் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 4 பேர் சரணடைந்த நிலையில் இன்று தென்காசியில் 3 பேர் சரணடைந்துள்ளனர்.
*அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு. மனு மீதான விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
*ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுக்கலாம். மக்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்.
*"உள்தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் குறையும்; வெப்பச்சலனம் காரணமாக ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
*தேர்வுத்துறை அறிவிப்பு.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் 11-ம் தேதி முதல் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://t.co/PFgIbxPejE என்ற இணையதளத்தில் இருந்து பள்ளிகள் தங்கள் UserID,PassWord பயன்படுத்தி ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
*யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வங்கி மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துவருகிறது - நிர்மலா சீதாராமன்.
*நிர்பயா வழக்கு: குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்.
தனது தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் - முகேஷ் சிங் மனு.
*கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ₹ 1 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.
*நிர்பயா வழக்கு: குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்.
தனது தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் - முகேஷ் சிங் மனு.
*கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல். கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு சென்று வந்த அலுவலர்கள், மாணவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்.
*கொரோனா எதிரொலி: தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொள்ள உள்ளது.
1,500 நபர்கள் வரை தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல். தனிமைப்படுத்துவதற்கான இடங்களாக சென்னை, ஜெய்சால்மர், செகந்திரபாத், கொல்கத்தா தேர்வு.
*நெதர்லாந்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு. நெதர்லாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு.
*கொரோனா எதிரொலி : மத்திய அரசு அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் முறைக்கு விலக்கு.
ஊழியர்கள் வருகை பதிவேடுகளில் தங்களது வருகையை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்.
*2017-ம் ஆண்டில் இருந்து யெஸ் வங்கியின் நிலைபாட்டை, ஆர்பிஐ கண்காணித்து வருகிறது.
*சொத்துக்களை மீறி யெஸ் வங்கி, தவறான வகையில் கடன்களை வழங்கியுள்ளது. யெஸ் வங்கியின் மறுசீரமைப்பு திட்டத்தை ஏப்ரல் 3ம் தேதிக்குள் நடைமுறைபடுத்த வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்.
யெஸ் வங்கியின் கணக்குகளை சீர்படுத்தும் பணி 2018-லேயே தொடங்கிவிட்டது. 2019-ஆம் ஆண்டு யெஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
*திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி புட்லூரைச் சேர்ந்த வேலன், சந்துரு ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது இரு தொழிலாளர்களையும் விஷவாயு தாக்கியது.
*உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு.
புதிய மாவட்டங்களில் தொகுதி மற்றும் வார்டு மறுவரை பணிகளை மேற்கொள்ள 8 வார அவகாசம் தேவை.
தேர்தல் ஆணையத்தின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்.
*கொரோனா வைரஸ் தாக்கம் : டெல்லியில் நடைபெறவிருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஒத்திவைப்பு.
*திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் அன்பழகன்
சென்னை அப்போலோவில் அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின் ஸ்டாலின் வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின்.
No comments:
Post a Comment