அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 16 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.
*நடப்பு, 2019 - -20ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி, ஜூன் வரை நீட்டிக்கப்பட உள்ளது என, வெளியான தகவல் தவறானது. இன்றுடன் நிதியாண்டு கணக்கு முடிக்கப்படுகிறது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதார்களின் வேலிடிட்டி ஏப். 20 வரை நீட்டிப்பு - ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் - பிஎஸ்என்எல். ஏப்ரல் 17ம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம் - ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் - ஏர்டெல்.
*காய்கறி வியாபாரி மீது வழக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியர்:
கடலூர் : காய்கறிகளை அதிக விலைக்கு விற்றதாக; வியாபாரி மீது வழக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.
*புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறியதாக பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மீது வழக்குப்பதிவு.
லாஸ்பேட்டையில் நெசவாளர்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் தடையை மீறி கூட்டம் கூடியதாக புகார்.
தடையை மீறி கூட்டம் கூடியது, பேரிடர் தடை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு.
*ஆந்திராவில்; குதிரையின் உடலில், கொரோனா வைரஸ் வடிவம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் காவல் துணை ஆய்வாளர் மாருதி சங்கர்.
*கொரோனா சிகிச்சை - திமுக அலுவலகம் தயார்!
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை தனிமை முகாமாக மாற்றி கொள்ளலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் மு.க.ஸ்டாலின் வழங்கிய கடிதத்தை சேகர்பாபு வழங்கினார்.
*வெளியூர் செல்ல விரும்புவோர் துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று முதல் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம்:
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பாஸ் வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி.
*வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!
சமீபத்தில் வெளி மாநில பயணம் மேற்கொண்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறியை உணர்ந்தால் உடனே உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்!
*கொரோனாவால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் முழு அடைப்பு என்பது துளியும் சாத்தியமில்லாதது. ஏழைகளின் வாழ்வு பாதிப்படையும் எனவே இந்தியா போல் அடைப்பு சாத்தியமில்லை என பாக்.பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு!.
*விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது - அமைச்சர் சி.வி.சண்முகம்.
*வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும்:
கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.
இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளி என்பது சவாலாக இருக்கிறது. - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.
*புதுச்சேரியில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
விவசாயிகள் விவசாய பொருட்கள் எதையும் எங்கும் கொண்டு செல்ல தடையில்லை- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
*வருகிற 1 மற்றும் 4ஆம் தேதிகளில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம்-அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு செய்ய உத்தரவு.
ஹோமம், பாராயணம், சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடத்த ஏற்பாடு.
யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது எனவும், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவு.
*கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை:
டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு.
*அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ., வட்டி வசூலிக்கப்படாது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் - தமிழக நிதித்துறை செயலாளர்.
*தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட மாநில வங்கிகள் குழு அறிவுறுத்தல்.
*இன்றுடன் ஓய்வுபெற இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டிபு. இன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் பணி நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு.
*சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறவிருந்த சித்திரைத் தேரோட்ட விழா ரத்து. ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறவிருந்த சித்திரைத் தேரோட்டமும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து. - கோயில் இணை ஆணையர்
*பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏப்ரல் 5-ம் தேதி காலை 6 முதல் 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே சமயபுரம் மாரியம்மன் படத்தினை வைத்து நெய்வேந்திரமாக தயிர்சாதம், இளநீர், கஞ்சி, நீர்மோர் , பானகம், ஆகியவற்றை படையலிட்டு மாலையினை கழட்டி, காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்ளலாம் - கோயில் இணை ஆணையர்.
*தமிழகத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 33,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது - தமிழக காவல் துறை அறிவிப்பு.
*ஏப்ரல் 1ம் தேதியான நாளை முட்டாள்கள் தினம் என்பதால் தவறான தகவல்களை பரப்பக்கூடாது:
கொரோனா தொடர்பாக ஏதேனும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக்.
*வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது. - தமிழக அரசு.
*ஊரடங்கின் போது பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.
விற்பனையாளர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொட்டலமிடுபவர்களுக்கு ரூ.2,000 .- தமிழக அரசு அறிவிப்பு.
*தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது - தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.
ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது. மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - தனியார் பள்ளிகள் இயக்குநர்.
*மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே அனைத்துக் கட்சி கூட்டத்தின் நோக்கம்:
இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பு, முழு ஆதரவையும் வழங்குவோம். - மு.க.ஸ்டாலின்.
*கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணை செலுத்த 3 மாத கால அவகாசம்.
சொத்துவரி , குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு. மார்ச், ஏப்ரல் வாடகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள். அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு அறிவித்த நேரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
*கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு:
பிரதமரின் நிவாரண நிதிக்கு 2.56 லட்சம் எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் தங்களின் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு.
*தமிழகம் முழுவதும் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுகளை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து உருவாக்கிவருகிறோம். - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு அமைக்கப்படும். வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தி வருகிறோம். உலக சுகாதார நிறுவனம் நம்முடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களை பணி நீட்டிப்பு செய்த முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*சென்னை: கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு:
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்குகிறார் முதல்வர் பழனிசாமி.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது:
உயிரிழப்பு - 38,721 பேர், குணமடைந்தோர் 1,69,995 பேர்.
*கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணை செலுத்த 3 மாத கால அவகாசம்.
சொத்துவரி , குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு. மார்ச், ஏப்ரல் வாடகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும். வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள். அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு அறிவித்த நேரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
*இந்திய நிலக்கரி நிறுவனம் ரூ.220 கோடியும், என்.எல்.சி ரூ.25 கோடியும் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ளது - மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி.
*முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி.
மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
மாதந்தோறும் 32,45,000 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வட்டாட்சியர், வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவு.
* தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா.
ஏற்கனவே 74 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது 124 ஆக உயர்வு- சுகாதாரத்துறை செயலர்.
*தமிழகத்தில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது- சுகாதாரத்துறை செயலர்.
*தமிழகத்தில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள்- சுகாதாரத்துறை செயலர்.
*டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131.
515 பேரை மட்டுமே இதுவரை கண்டறிந்து உள்ளோம். மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும். நாமக்கல்லில் 18 பேர், நெல்லையில் 22 பேர் - கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்.
டெல்லி மாநாடு சென்றவர்கள் தயவு செய்து தாங்களாக வந்து தகவல் கூறுங்கள்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர். உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம்.
*’கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்’ கொரோனாவால் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேரும், தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment