முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மருத்துவர் இராமதாசு அய்யா தொலைபேசியில் பேச்சு: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை. - Agnipuratchi

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மருத்துவர் இராமதாசு அய்யா தொலைபேசியில் பேச்சு: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை.

Share This

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மருத்துவர் இராமதாசு அய்யா  தொலைபேசியில் பேச்சு: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் வரவேற்பு தெரிவித்தார். அதேநேரத்தில், கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது போதுமானதல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம்  மருத்துவர் அய்யா அவர்கள் கூறினார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது மக்களிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எந்தெந்த வழிகளில் எல்லாம் உதவியாக இருக்கும் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்த கருத்துகளை முதலமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக் கொண்டார். அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages