வளர்ச்சி அரசியல்: அன்புமணி இராமதாஸ், உடன் பிற தலைவர்கள் இடையே விவாதத்துக்கு ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அய்யா வேண்டுகோள்.
இது பல ஆண்டுகளாக நான் கூறி வரும் விஷயம் தான். அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கூட இதை நான் பேசினேன். இப்போதும் கூறினேன். தமிழகத்தை விரைவாக முன்னேற்ற வேண்டும் என்றால் தமிழகத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையும், செயல்திட்டங்களும் தமிழகத்தை வழி நடத்திச் செல்பவர்களுக்கு வேண்டும்.
தமிழகத்தை ஆள வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு ஆசைப்படுபவர்களையும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசையும் அழைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பொது விவாதம் நடத்த தமிழ்நாட்டு ஊடகங்கள் முன்வர வேண்டும். முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுபவர்களின் திறமைகள் குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அதன் அடிப்படையில் தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.
தகுதி, தகுதி என்று பேசும் ஊடகங்கள் தகுதியை அளவீடு செய்து பார்ப்பதற்கான விவாத நிகழ்ச்சியை நடத்த முன்வருவார்களா?
No comments:
Post a Comment