சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா

12. உயர்கல்வியில் ஓபிசிக்கு
27% இட ஒதுக்கீடு கோரிக்கை!

மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை பல்வேறு சட்டப் போராட்டங்களைக் கடந்து 1993&ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

ஆனாலும், உயர்பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் சேர தகுதி வாய்ந்த   மாணவர்களை தேட வேண்டியிருந்தது. இன்று வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27%  இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்காததற்கு இது தான் முக்கிய காரணம் ஆகும். இது பற்றி இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் கவலைப்படாமல் இருந்த நிலையில், 27% இட ஒதுக்கீட்டை கல்விக்கும் நீட்டிக்க வேண்டும் என்று முதன்முதலில் நான் தான் வலியுறுத்தினேன்.

‘‘ கல்வியில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் அவர்கள்  படித்து வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவார்கள். கல்வியில் இட ஒதுக்கீடு வழங்காமல் வேலைவாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதால் எந்த பயனும் ஏற்படாது’’ என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி  வந்தேன். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஏராளமான போராட்டங்களும் நடத்தப் பட்டன. 1996, 1998, 1999, 2004 ஆகிய மக்களவைத் தேர்தல்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் இது தொடர்பான வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம்.

வட மாநிலங்களில் சமூகநீதியில் அக்கறை கொண்ட சில கட்சிகளும் இந்தக் கோரிக்கையை ஆதரித்தன. நாடாளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 2004&ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தில்லியில் பதவியேற்றது.

அந்த அணியின் செயல்பாட்டுக்கான குறைந்தபட்ச பொது செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த செயல் திட்டத்தில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்பதையும் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அதை ஏற்று அந்த திட்டத்தை பொது செயல்திட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சேர்த்துக் கொண்டது. அதன் மூலம் கல்வியிலும் 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பிறந்தது.

நாளை....

நான் நடத்திய உரிமைப்போர், சாத்தியமான சமூக நீதி!
                                *****

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages