அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

*காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை மூடப்பட்டது.
கொரோனா தொடர்பாக அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடல் ஆலை திறக்கப்படாது. - ஹூண்டாய் நிர்வாகம்.

*தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் முடிந்ததை தொடர்ந்து அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின.

சென்னையில் முக்கிய இடங்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் தற்போது ஓடத் தொடங்கியுள்ளன.
மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கம்.

*திருவண்ணாமலை: செய்யாறு அருகே சிப்காட் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அறிவிப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 31 வரை சிப்காட் ஆலைகள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தந்துள்ளன.

*நேற்றைய ஊரடங்கு வெற்றியல்ல! ஒரு நீண்ட போராட்டத்தின் தொடக்கம் தான் - பிரதமர் நரேந்திர மோடி!

*புதுச்சேரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் கடலூர்-புதுவை அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தம்.

கடலூர்-சென்னை பேருந்துகள் விழுப்புரம் விழுப்புரம் வழியாக இயக்கம். தமிழகம், புதுவை பதிவெண் கொண்ட வாகனங்கள் தவிர வேறு மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

*புதுச்சேரி, காரைக்காலில் உணவு விடுதிகள், கடைகள் திறந்திருக்கலாம்.
அங்கு மக்கள் செல்லத் தடையில்லை - கொரோனாவால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது பற்றி முதல்வர் நாராயணசாமி விளக்கம்.

*திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடல் - பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம்.

*மதுரை : உசிலம்பட்டி அருகே கொரோனா பயத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி.

*கொரோனா முன்னெச்சரிக்கை: நாடு முழுவதும் தனியார் வங்கிகளின் சேவை நேரம் குறைப்பு.
பெடரல் வங்கி, எச்டிஎஃப்சி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ, சிட்டி வங்கி, கோடக் மகிந்திரா ஆகிய வங்கிகளின் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி என குறைப்பு.

*அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை.

தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஆலோசனை.
இதுவரை எடுக்கப்பட்ட, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.
இனிமேல், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

*தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்து சேவைகள் மார்ச் 31ஆம் தேதி வேலை நிறுத்தம்.உடனடியாக அமலுக்கு வருவதாக ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவிப்பு.

*கேரளாவில் அனைத்து மதுபான பார்களையும், மறு உத்தரவு வரும் வரை மூட முதல்வர் பினராயி விஜயன் ஆணை. சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படலாம் என்பதால் குளிர்பான கடைகளும் மூடப்படும் - முதல்வர் பினராயி விஜயன்.

*கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்- உச்சநீதிமன்றம்.

*அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் இடங்களில் கூட்டம் கூடாமல் இருப்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறியை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகளை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு:

*கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் பழனிசாமி.

*தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்து சேவைகள் மார்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தம். சேவை நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவிப்பு.

*உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு.

நாளை மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக தகவல்.
ஆவணங்களை எடுக்க வழக்கறிஞர்களுக்கு நாளை மாலை 5 மணி வரை அவகாசம்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, நேரடியான விசாரணை கிடையாது - உச்சநீதிமன்றம். அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு.

*கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது - முதல்வர் பழனிசாமி.

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம். மருத்துவமனைகளில் 92,406 படுக்கை வசதிகள் உள்ளன, தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

*புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல் - முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுபானக் கடைகளை மூடபடும்
புதுச்சேரியில் பொதுமக்கள் மார்ச் 31ஆம் தேதி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் - முதல்வர் நாராயணசாமி.

*கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாக தெரியவில்லை - பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

*தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

வருகின்ற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும். நாளை மாலை 6 மணிக்கு அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு.

அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது.
நாளை மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ஆம் தேதி வரை தடை உத்தரவு - முதல்வர் பழனிசாமி.

*கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட உத்தரவு - மாவட்ட ஆட்சியர்.

*பாஸ்போர்ட் முடக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் - தமிழக அரசு.

*கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - தமிழக அரசு.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக உயர்வு.

*கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை நகைக் கடைகள் மூடல். - நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி.

*டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்-சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு.

*ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல். ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.

*3 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பு.

கொரோனா அச்சுறுத்தல்: சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பு. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்படும் - தமிழக அரசு.

*விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு வசதியாக உணவகங்கள் செயல்பட அனுமதி - முதல்வர் பழனிசாமி.

*மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து தவிர மற்றவர்களுக்கு தடை - முதல்வர் பழனிசாமி.

பால், காய்கறி, மளிகை,  இறைச்சிக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு. காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படும்.
தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

*தனியார் நிறுவனங்கள் பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக்கூடாது - முதல்வர் பழனிசாமி.

அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது.
உணவகங்கள், மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - முதல்வர் பழனிசாமி.

*தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவு:

காவல் நிலையம் வருவோர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

31ஆம் தேதி வரை காவல்துறை ஆலோசனைக் கூட்டம் வேண்டாம் - டி.ஜி.பி.

காவல் நிலையத்தில் கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சலுடன் மனு கொடுக்க வருபவர்களை அனுமதிக்க வேண்டாம்.
காவலர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு உடையையும் அறிமுகம்.

*இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு. கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 55 வயதான நபர் கொரோனாவால் உயிரிழப்பு.

*நாளை இரவு முதல் உள்நாட்டு விமான சேவை முற்றிலும் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!

*தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வருகிறது.
வணிகர்கள் தானாகவே முன் வந்து கடைகளை அடைத்து வருகின்றனர். அத்தியவசிய பொருட்களின் அவசியம் கருதி காய்கறி அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் இரு தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை - அரசு அனுமதி

*நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராக தடை:
உச்சநீதிமன்றத்தில் மனு அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை ஆன்லைனில் மேற்கொள்ள உத்தரவு.
- உச்சநீதிமன்றம்.

*"ஈரானில் உள்ள 600 இந்தியர்களை மீட்டு வர அந்நாட்டைச் சேர்ந்த மஹான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அழைத்துவரப்பட உள்ள 600 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை!"- மத்திய அரசு.

*கொரோனா முன்னெச்சரிக்கை : கள உதவியாளர் பதவிக்கு இணைய வழியாக விண்ணப்பம் பெறப்படுவது ஏப்.15ம் தேதி வரை ஒத்திவைப்பு.

*கேரளாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று:
25 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள்.
கேரளாவின் காசர்கோட்டை சேர்ந்த 19 பேர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் என தகவல்.
எர்ணாகுளத்தில் -2, பத்தனம்திட்டா மற்றும் திருச்சூரில் தலா ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு.

*விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை சென்னை மாநகர பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்.

*ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருப்பதால் சென்னை பேருந்துகள் கூடுதல் தொலைவு இயக்கம்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

*அனைத்து நியாயவிலைக் கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க தமிழக அரசு ஆண அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல்.

*11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து தமிழக பள்ளிகல்வித்துறை அறிவிப்பு.
மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம்.

*ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்ய கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்- நிர்மலா சீதாராமன்.

இந்திய உணவுக்கழகம் மூலம் 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற அனுமதி.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படாமலிருக்க ஏற்பாடு- மத்திய அரசு.

*டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு  நாளை மாலை 6 மணி முதல் அமல் - தமிழக அரசு அறிவிப்பு!

*கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும் என அரசாணை வெளியீடு.

*தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு.

*ஊரடங்கின் போது வங்கிகள், ATMகள் RBI விதிகளின்படி செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages