அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை தெரியுமா? - Agnipuratchi

அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

Share This

அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

"தொற்றுநோய் சட்டம் 1897-ன் படி அரசின் விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்"

கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், இதனை மீறினால் சட்ட ரீதியான நவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை அடுத்து, நேற்று தேசிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

எனினும், மாலை 5 மணிக்கு மருத்துவர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைத்தட்டுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன் படி, பலரும் வீதிகளில் கூடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

கொரோனா பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நிலையில், நூற்றுக்கணக்கானோர் ஒன்றாக கூடியது அச்சத்தை ஏற்படுத்தியது.

இன்று ட்வீட் செய்த பிரதமர் மோடி, “மக்கள் இன்னும் சீரியஸாக இதனை எடுத்துக்கொள்ளவில்லை.

தயவு செய்து அரசுக்கு ஒத்துழைக்கவும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்த மத்திய அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவை மற்றும் நெல்லையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களையும் சேர்த்து தனிமைப்படுத்த இன்று மாநில அரசு அறிவிக்கை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்க சட்டம் வழி செய்கிறது.

தொற்றுநோய் சட்டம் 1897-ன் படி அரசின் விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages