சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்!- மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்!- மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்!- மருத்துவர் இராமதாசு அய்யா

10. 27% இட ஒதுக்கீட்டுக்கான
எதிரான வழக்கும் - தீர்ப்பும்!

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்த நிலையில்,   இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1990-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்திரா சகானி என்ற பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இந்திய நீதித்துறை வரலாற்றில் இந்த வழக்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

1990-ஆம் ஆண்டு இறுதியில் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய போது, இந்த வழக்கை இரு நீதிபதிகள் தான் விசாரித்தனர்.  பின்னர் வழக்கை விசாரிக்கும்  நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாகவும், ஐந்தாகவும், ஏழாகவும் கடைசியாக ஒன்பதாகவும் அதிகரித்தது. இந்த வழக்கில் 1992-ஆம் ஆண்டு  நவம்பர் 16-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாச்சலையா தலைமையிலான  9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் ரத்தினவேல் பாண்டியனும்  இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்த போதே பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை  1991&ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் 27% இட ஒதுக்கீட்டு வழக்கின் விசாரணையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் 1992&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு செல்லும்.

2. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும்; பொருளாதார அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடாது.

3. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடினரையும் ஒன்றாக பார்க்கக் கூடாது.

4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் விலக்கி வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது.

5. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம்; அவர்களுக்கு தொகுப்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டு வழங்கலாம்.

6. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% இடங்களுக்கு மிகக்கூடாது.  நியாயமான காரணங்கள் இருந்தால் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கலாம். எனினும் இதில் அதிக கவனமும், எச்சரிக்கையும் செலுத்தப்பட வேண்டும்.

7. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது.

ஆகியவை தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து 1993&ஆம் ஆண்டில் 27% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

நாளை....

27% இட ஒதுக்கீட்டின் இன்றைய நிலை!.
                          

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages