சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா

8. மண்டல் பரிந்துரைகள்:
செயல்படுத்துவதில் இடையூறுகள்!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது சமூகநீதிக்கும் பொருந்தும். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டவுடனேயே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்துவிடவில்லை. மண்டல் ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அதன் பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வந்தன. அதுவும் முழுமையாக அல்ல.

ஜனதா ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980&ஆம் ஆண்டின் இறுதியில் தான் அதன் அறிக்கையை தாக்கல் செய்தது. 1980-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் மண்டல் ஆணையம் தாக்கல் செய்யப்பட்ட போது, மத்தியில் ஜனதா அரசு கவிழ்ந்திருந்தது; இந்திரா காந்தி தலைமையில்  புதிய அரசு அமைந்திருந்தது. மத்திய உள்துறை அமைச்சராக ஜெயில்சிங் இருந்தார். அவர் தான் மண்டல் ஆணையத்தின் அறிக்கையை பெற்றுக் கொண்டார். ஆனால், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தினால் அது தங்களின் வாக்கு வங்கியை கடுமையாக பாதிக்கும் என்று  காங்கிரஸ் கட்சி கருதியது. அதனால் இந்திரா காந்தி ஆட்சியில் மண்டல் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.

1984-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜிவ்காந்தி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகும் மண்டல் அறிக்கை தூசி தட்டி எடுக்கப்படவில்லை. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றி, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஏராளமான அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால், இராஜிவ்காந்தி அரசு அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

1989-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அரசு படுதோல்வி அடைந்து, வி.பி.சிங் தலைமையிலான அமைந்தது. பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்தே மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வி.பி.சிங் நினைத்தார். ஆனால், அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த கட்சிகள் அதை ஏற்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் தமது பறிபோவது உறுதி என்றாகிவிட்ட நிலையில், 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை பிறப்பித்தார். அதன்பின் இரு நாட்கள் கழித்து நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் 27% வழங்குவதை வி.பி.சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நாளை....

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages