சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா

9. இடஒதுக்கீட்டுக்கு எதிராக
வெடித்த போராட்டங்கள்!

1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை நாள் விழாவில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பிரதமர் வி.பி.சிங் வெளியிட்டார். அதற்கு வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இட ஒதுக்கீடு  அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள் அதற்கு எதிரான போராட்டம் வெடித்தது. அந்த ஆண்டின் செப்டம்பர் 19-ஆம் தேதி தில்லியில் தேசபந்து கல்லூரி மாணவர் ராஜிவ் கோஸ்வாமி இட ஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளித்தார். அதைத் தொடர்ந்து வி.பி.சிங்கின் முடிவால் தங்களின் அரசாங்க வேலை குறித்த கனவு கலைந்து விட்டதாக கருதிய உயர்சாதி மாணவர்கள் பலர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். வட மாநிலங்களில் மட்டும் 200&க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீக்குளித்தனர். அவர்களில் 62 மாணவர்கள் உயிரிழந்தனர்.   வட இந்தியா முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. கடைகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. போராட்டங்களும், பேரணிகளும் பெருமளவில் நடந்தன. 6 மாநிலங்களில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் மட்டும் 50 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில் சமூகநீதியின் தொட்டிலான தென்னிந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடக்கவில்லை.

சமூகத்தளங்களில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளே தவறானவை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 1931&ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை கணக்கிடப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலரும் கூறினார்கள். பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வெறும் 32% மட்டும் தான் என்று இன்னொரு தரப்பினர் கூறினார்கள். இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் பல வாரங்களுக்கு நீடித்தன. ஒரு கட்டத்தில் 27% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 01.10.1990 அன்று வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 27% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் படிப்படியாக முடிவுக்கு வந்தன.

நாளை....

27% இட ஒதுக்கீட்டுக்கான எதிரான வழக்கு
                                    **

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages