அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*நாமக்கல் மாவட்டம் சின்னவேப்ப நத்தம் என்ற இடத்தில் லாரியும், டாடா சுமோவும் நேருக்கு நேர்  மோதிக் கொண்டதில் சுமோவில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

*இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16ம் தேதி முதல் நிறுத்திவைப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்ததால் 85 ஆக அதிகரிப்பு.

*கோவிட்-19 பரவல் காரணமாக, இத்தாலி, இலங்கை, தென்கொரியா, குவைத், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு செல்லும் ஏர் இண்டியா விமானங்களின் சேவை ஏப்ரல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் - முதலமைச்சர் பழனிசாமி.

ஜெயலலிதா அறிவித்த எய்ம்ஸ் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.

மதுரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் - முதலமைச்சர்.

*கலால் வரி ரூ.3 அதிகரிக்கப்பட்டதால் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை ரூ.3 அதிகரிக்கிறது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. இதன் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 72.57 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.02 ஆகவும் விற்பனையாகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.3 அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ. 3 உயர்கிறது.

*24 மணிநேர உதவி மையத்தின் எண் 011 – 23978046 மற்றும் மின்னஞ்சல் முகவரி ncov2019@gmail.com ஆகிவற்றில் கொரோனா வைரஸ் குறித்த உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

*ராஜஸ்தான்: ஜோத்பூர், மாவட்டத்தில் டிரக்கும், ஜீப்பும் மோதி விபத்தானதில் 11 பேர் உயிரிழப்பு, 3 பேர் காயம்.

*தங்கம் விலை மேலும் குறைவு:
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்தது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்தை விட குறைந்தது.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.31,472க்கு விற்பனை. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.3,934க்கு விற்பனை.

*மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு.

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
கொரோனா பாதிப்பு எதிரொலியாக மார்ச் 16 முதல் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

*திண்டுக்கல்லில் புதிதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு. திண்டுக்கல்லில் ரூ.340 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது.

*புதுச்சேரி, மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் அறையில் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், பேட்டரி, ஹெட்போன் பறிமுதல்.

*கொரோனா அச்சுறுத்தல் : மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை தடை விதித்தது மும்பை கிரிக்கெட் சங்கம்.

*கொரோனா அச்சுறுத்தல் : ஜப்பானில் தேவைப்பட்டால் அவசர நிலையை பிரகனப்படுத்த பிரமருக்கு அதிகாரம் வழங்கி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.

*கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு - மத்திய அரசு அறிவிப்பு.

*இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு.

*BREAKING: டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடைபெறும் - ஜப்பான் பிரதமர் அபே அறிவிப்பு.

*குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் சந்திப்பு.

சிஏஏ குறித்து ஏற்பட்டிருக்கும் ஐயப்பாடுகளை களைவது தொடர்பாக ஆலோசனை. கூட்டத்தில் தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்பு.

*இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா பரவாது; தும்மல், இருமல் போன்றவற்றால் தான் கொரோனா பரவும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது. - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா.

*கொரோனா எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஏப்ரல். 3 ஆம் தேதி நடைபெற இருந்த பத்ம விருதுகள் விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
- மத்திய உள்துறை அமைச்சகம்.

*சேலம் : சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளமதி பெற்றோருடன் செல்ல விருப்பம். மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம்.

*பெண்ணை கடத்தியதாக. கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு:

திருமணத்திற்காக இளமதி என்ற பெண்ணை கடத்தியதாக செல்வன், கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ஈரோடு; பவானி போலீசார் நடவடிக்கை.

*கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 31ம் தேதி வரை பஞ்சாபில் உள்ள அனைத்து திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் மூடப்படுகிறது. மாநிலத்தில் விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது! - பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர்.

*எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்- மார்ச் 16 முதல் 31ம் தேதி வரை நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது- திடீரென இன்று நிறுத்தி வைக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்டபடி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை - முதலமைச்சர்.

*கொரொனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு:
பொது சுகாதார சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய் பட்டியலில் கொரோனா சேர்ப்பு - அரசிதழ்.

*செல்போன்கள் மீதான ஜிஎஸ்டி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிப்பு:
ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் முடிவு - நிதியமைச்சர் நிர்மலா சீ
தாராமன்.

*சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம்.

என்பிஆர்-ல் சில அம்சங்களை நீக்குவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். - சிஏஏ தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் ஜவாஹிருல்லா பேட்டி.

*சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம்.

என்பிஆர்-ல் சில அம்சங்களை நீக்குவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.- சிஏஏ தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் ஜவாஹிருல்லா பேட்டி.

*தமிழகத்தில் மதவாதமும், சாதியவாதமும் சூழும் நிலையில் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார் ஸ்டாலின்.

சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள்- திருமாவளவன்.

*நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages