அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஒ. அலுவலகங்களில் புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்குவது மார்ச் 31ம் தேதி வரை  நிறுத்திவைப்பு. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு

*பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்:

குளிர்சாதன பேருந்துகளில் போர்வைகள் வழங்க தடை; திரைச்சீலைகளும் அகற்றப்படும்.
கால்டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுரை. - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

*டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைதான அருண் பாலாஜி, தீபக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு.

*கடலூர் : அரசு அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய ஆயிபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ்குமார் பணியிடை நீக்கம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

*கொரோனா எதிரொலியாக மலேசியாவில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள், பயணிகளை மீட்க விமானங்கள் அனுப்பப்படும்.*

*ஏர் ஆசியா விமானங்கள் மூலம் மாணவர்கள் டெல்லி, விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்படுவர்- அமைச்சர் ஜெய்சங்கர் .

*கொரோனா வைரஸ் சிஏஏ- போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:

சென்னை: சிஏஏ-க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு. கொரோனா எதிரொலியாக போராட்டக்குழுவினர் அறிவிப்பு.

*கொரோனா எதிரொலியால் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து. உதகையிலிருந்து-குன்னூர் வரை இயக்கப்படும் பயணியர் மலை ரயில் போக்குவரத்து சேவையும் முற்றிலுமாக ரத்து.

*நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட சிறையில் ஒத்திகை.

*நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் நாளை மறுநாள் தூக்கிலிடப்படவுள்ள நிலையில்  திகார் சிறையில் இன்று ஒத்திகையை தொடங்கினார் தூக்கிலிடும் பணியாளர் பவன்.

*கொரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதரிடம் பரிசோதிக்க சீனா உத்தரவு. மனிதர்களிடம் அமெரிக்கா சோதனையை தொடங்கிய நிலையில் சீனாவும் தடுப்பு மருந்தை பரிசோதிக்கிறது.

*பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க முயன்ற மத்திய பிரதேச காங். தலைவர் திக்விஜய் சிங் தடுத்து நிறுத்தம்.
அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திக்விஜய் சிங் தர்ணா.

*முகக்கவசங்கள் அணிவதை விட கை கழுவுதல் மற்றும் முகத்தில் அடிக்கடி கை படாமல் பார்த்துக்கொள்வதுதான் சிறந்த வழி - உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால மருத்துவ சேவைகள் பிரிவு அதிகாரி மைக் ரியான்.

*கொரோனா அச்சுறுத்தல் - கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

*மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 2 வாரம் தடை - மலேசிய அரசு.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரிப்பு.
147 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

*சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு - மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.
பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்கள் முன்னெச்சரிக்
கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.

*கொரோனா எதிரொலி: தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து.

*14 ரயில்கள் ரத்து..!:

போதிய முன்பதிவுகள் இல்லாததால் 14 ரயில்களின் சேவையை ரத்து செய்தது தெற்கு ரயில்வே எக்ஸ்பிரஸ், துரந்தோ உள்ளிட்ட பல்வேறு ரயில்களின் சேவையை ரத்து செய்தது தெற்கு ரயில்வே.

*உச்சநீதிமன்றத்தை மூட வேண்டி வரும் - தலைமை நீதிபதி போப்டே.

கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்தும்,ஏன் உச்சநீதிமன்ற வராண்டாக்களில் கூட்டம் அதிகமாக உள்ளது?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கேள்வி.
சுயகட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், உச்சநீதிமன்றத்தை மூட வேண்டி வரும் - தலைமை நீதிபதி போப்டே.

*தங்கம் விலை சவரனுக்கு ரூ.952 உயர்வு-ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3939க்கு விற்பனை. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.31,512க்கு விற்பனையாகிறது.

*மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என பேரவையில் தங்கம் தென்னரசு கேள்வி. முதல்வர் பதில்.

சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது - தங்கம் தென்னரசு.
மதுரை மக்கள் கோரிக்கையை ஏற்று, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றம். செலவு அதிகமாக இருப்பதால், குறைந்த இடைவெளியில், 3 இடங்களில் சுங்க கட்டணம் வசூல் - முதல்வர்.

*உத்தர பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 2 வரை அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது; மாணவர்கள் அனைவரும் ‘பாஸ்’- உத்தர பிரதேச அரசு.

*கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெங்களூரு-புதுச்சேரி விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

*முட்டை விலை சரிவு.

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக  முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிவு ரூ1.95 ஆக சரிவு.

*கொரோனா முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை மதுபான பார்கள் மூடவேண்டும்.
மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் இயங்கும். - முதல்வர் நாராயணசாமி.

*நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு:

வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற இருந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு ஒத்திவைப்பு, மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் - டிஎன்பிஎஸ்சி.

*சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வினியோக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்.

*இதுவரை 276 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஈரானில் 255, ஐக்கிய அரபு அமீரகத்தில் 12, இத்தாலியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு; குவைத், ருவாண்டா, இலங்கையில் தலா ஒரு இந்தியருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. - மத்திய அரசு.

*தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு - சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன்.
திமுக சார்பில் போட்டியிட்ட திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் சிவா மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு.

*உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது.

பாதிக்கப்பட்டோர் 1,99,475 பேர்.
குணமடைந்தோர்  82,812  பேர்.

*திருட்டு மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் பழனிசாமி.

*இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை. மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது -  ராகுல் காந்தி.

*கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் செலுத்தலாம். tangedco.gov.in அல்லது tneb app மூலம் மின்நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தலாம் - மின்வாரியம்.

*2வது கருணை மனுவும் நிலுவையில் இருப்பதால், தங்களது மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா கொலை குற்றவாளிகள் அக்ஷய் மற்றும் பவன் புதிய மனுதாக்கல்.

*கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்.

*கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்.

*கொரோனா பாதிப்பு எதிரொலியால் குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைப்பு. கலந்தாய்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் - டிஎன்பிஎஸ்சி.

*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.568 குறைந்து ரூ.30,944-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.71 குறைந்து ரூ.3,868க்கு விற்பனை செய்யப்படுகிறது.

*மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்துள்ளனர்

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, ரயில்களில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் டிக்கெட்டுகள் ரத்து - பிடிஐ செய்தி நிறுவனம் தகவல்

*மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சந்திப்பு

*கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கே.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி ராணி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது.
வீட்டுமனை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜெயந்தி கைது.

*இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை தகவல்.

*சென்னையில் 2வது நபருக்கு கொரோனா. டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages