அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*புதுச்சேரியில் இரண்டு தனியார் கல்லூரி மாணவர்கள் மோதலால் பரபரப்பு

வீடியோ:- https://youtu.be/R6IXQ1mEtG4 Engineering Vs Arts கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கி கொண்ட அதிர்ச்சி காட்சிகள்

*ஆர்.எஸ்.பாரதி மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு:

சென்னை: எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு. பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார்.

*மத்திய பிரதேச அளுநர் லால்ஜி டாண்டனுடன் முதலமைச்சர் கமல்நாத் சந்திப்பு.

*கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - எவரெஸ்ட் மலையேற தடை:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எவரெஸ்ட் சிகரத்திற்கான மலையேற்றத்தை தற்காலிகமாக ரத்து செய்தது நேபாள அரசு!

*சி.ஏ.ஏ. சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டம்:  தமிழக அரசு அழைப்பு.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சிறப்புக் கூட்டம்: இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு. நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தலைமை செயலாளர் வேண்டுகோள்.

*கொரோனா எதிரொலி  டெல்லியில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படாது:

கொரோனா எதிரொலி- டெல்லியில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படாது":
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு.
நாளை ஐ.பி.எல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

*மத்தியப் பிரதேச மாநில ஆளுநரை சந்தித்து பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக முதல்வர் கமல்நாத் புகார் மனு; சபாநாயகர் அறிவிக்கும் நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கத் தயார் என கமல்நாத் திட்டவட்டம்!*

*சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க 90 நாள் அவகாசம் தேவை என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். உரிமம் கோரிய 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

*காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை  விடுதலை செய்ய உத்தரவு. கடந்த 7 மாத காலமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

*கொரோனா தடுப்புபணிகள் - முதல்வர் ஆலோசனை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

*கொரோனா விழிப்புணர்வை 'ஐயா' படத்திலேயே நான் ஏற்படுத்தி விட்டேன் - நடிகர் வடிவேலு.

தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கை கொடுப்பதை விட கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைப்பதே நல்லது -  நடிகர் வடிவேலு  பேட்டி.

*சென்னை மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரம்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட்-கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை. கடந்த 6ஆம் தேதி சூளைமேட்டில், மாநில கல்லூரி மாணவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

*கொரோனா அச்சத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் -15-ம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு.

ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருந்த நிலையில் ஒத்திவைக்க வாய்ப்பு. ஐபிஎல் போட்டிகளை காண வரும் அதிகப்படியான ரசிகர்களால் கொரோனா பரவும் அபாயம் காரணமாக ஒத்திவைப்பு.

*கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உத்தரபிரதேசத்தில் வரும் மார்ச் 22 வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை; மார்ச் 22ல் நிலைமை ஆய்வு செய்யப்பட்டு விடுமுறை நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்படும்- முதல்வர் யோகி ஆதித்யநாத்.

*திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை:

கொரானா பரவுவதால் கர்நாடகாவில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மதுபான விடுதிகளை மூட கர்நாடக அரசு உத்தரவு. மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அடுத்த 1 வாரத்திற்கு தடை.

*டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு.

25697 டாஸ்மார்க் ஊழியர்களுக்கு மாதத்தொகுப்பு ஊதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி. தமிழ்நாடு மாநில வாணிப கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுவழங்க ரூ 15.47 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கமணி.

*கொரோனா பாதிப்பால் திருமணம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகாவில் தடை!

பள்ளிகள்,கல்லூரிகள்,திரையரங்குகளை ஒரு வாரத்திற்கு மூடி வைக்கவும் முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவு!
கர்நாடகாவில் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பு!

*வணிக வளாகங்கள், மார்க்கெட் மற்றும் மதுபானக் கூடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தல்!

*மது போதையில் வாகனம் ஓட்டினால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓட்டுநர் உரிமத்தையும் உடனடியாக ரத்து செய்யவும் வலியுறுத்தல்!

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க காவல்துறையில் தனிப்பிரிவை உருவாக்கவும் உத்தரவு!

*BREAKING: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு.

*கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages