அக்னிச் புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்: - அரசுத் தேர்வுகள் இயக்ககம்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுரை.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு. 10ம்வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்.
*கொரோனா தாக்கம்: நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு தொடங்கியது- தேசமே முடங்கியது.
நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தம்.
நாடு முழுவதும் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மூடல்.
அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்கள் இயங்கவில்லை.
சுகாதாரம், காவல்துறை, ஊடகத்துறையினர் தவிர அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர்.
*டெல்லியில் வீட்டில் தங்காமல் வெளியே இருந்த நபர்களுக்கு டெல்லி போலீஸ் ரோஜாப்பூ கொடுத்து அறிவுரை.
வீட்டிற்கு சென்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வெளியே இருந்த நபர்களுக்கு டெல்லி காவல்துறை அறிவுறுத்தல்.
*தஞ்சை : அரசு உத்தரவை மீறி இயங்கிய 6 ஆட்டோக்கள் மற்றும் 1 சரக்கு வாகனம் பறிமுதல் - மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை
*கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள இத்தாலி நாட்டில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தனடைந்தனர்.
*'இந்தியாவில் கொரோனா பாதிப்பு 324 ஆக உயர்வு':
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 315இல் இருந்து 324 ஆக உயர்வு. - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
*மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 74 ஆக உயர்வு
*இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு.
*மஹாராஷ்டிராவை சேர்ந்த 63 வயதான முதியவர் உயிரிழப்பு.
*மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து - இந்தியன் ரயில்வே.
நாடு முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து-கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்திய ரயில்வே அறிவிப்பு. கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
*தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு - தமிழக அரசு
*புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை-முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை உத்தரவு. புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
*சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்- துரைமுருகன்.
மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.
யாரும் வெளியே வராத போது மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது.
அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- துரைமுருகன்.
*உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு காலை 6 மணிவரை நீட்டிப்பு.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஊரடங்கு நள்ளிரவு 12 வரை நீட்டிப்பு.
*உத்தரகண்ட் மாநிலத்தில் 31ஆம் தேதி வரை ஊரடங்கு-உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு. உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் கிடைக்கும் எனவும் அறிவிப்பு.
*கொரோனா பாதிப்பு காரணமாக முந்தைய மின் கட்டணத்தையே இந்த மாதத்திற்கும் செலுத்தலாம் - மின்வாரியம் அறிவிப்பு.
*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திமுக எம்.பி.,, எம்.எல்.ஏ-க்கள் நிதியுதவி.
தங்கள் ஒருமாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்-திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.
*இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு.
*டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு. வரும் 31ஆம் தேதி வரை அமல் என அறிவிப்பு.
*இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களில் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க உத்தரவு
அவசர தேவைகளை தவிர மற்றவற்றை மேற்கொள்ள தடை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு
*மகாராஷ்டிரா முதலமைச்சர் வேதனை
கொரோனா வைரஸ் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது நிலையில் மகாராஷ்டிராவில் 144 பயன்படுத்துவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அயல் நாட்டு விமானங்களும் மும்பையில் தரையிறங்க அனுமதிக்கப்படாது: மகாராஷ்டிரா முதல்வர் வேதனை
*தமிழ்நாட்டில் முழு அடைப்பு மற்றும் மக்கள் ஊரடங்கு நாளை அதிகாலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது நல்ல நோக்கத்தினாலான நடவடிக்கை. ஆனால், போதுமானதல்ல. முதல்கட்டமாக குறைந்தபட்சம் மார்ச் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை!
*தற்போது! மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மணியோசை, கைதட்டல் மற்றும் விசில்களை அடித்து சென்னை மாநகர மக்கள் நகரை அதிர வைத்து வருகின்றனர்.
*தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க உத்தரவு
கொரோனா பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை முடக்க , மத்திய அரசு உத்தரவு
டெல்லி , சத்தீஸ்கர் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் முடக்கம் புதுச்சேரியில் மாஹே மாவட்டம் முடக்கம்.
*உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார்.தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக்குறைவால் காலமானார்.
*தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகள் 31ம் தேதி இரவு வரை நிறுத்தம்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 31ம் தேதி வரை நிறுத்தம்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்.
*நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நாளை முதல் ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை. தனிமைப்படுத்தப்பட்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட கூடாது.
தினக்கூலி தொழிலாளர்கள், நடைபாதைவாசிகளுக்கு உணவு வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்.
*விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு!
- அதிமுக அதிரடி நடவடிக்கை
*முகக்கவசம், சானிடைசரை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்தால் அதீத நடவடிக்கையாக குண்டர் சட்டம் பாயும்.
- தமிழக அரசு.
*தமிழகத்தில், நாளை காலை 5 மணி முதல், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
*கடலூர் புதுச்சேரி சாலை மூடப்பட்டது.
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு அண்டை மாநில வாகனங்கள் அனுமதி இல்லை என புதுவை முதல்வர் அறிவித்த நிலையில் தற்போது இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
No comments:
Post a Comment