அக்னிப்புரட்சி (11.04.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (11.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (11.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகம் முழுவதும் 1,05,687 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

*உலகம் முழுவதும் கொரோனாவால் 18,97,533 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,76,109 பேர் குணமடைந்துள்ளனர்.

*உலகலாவில் அமெரிக்கா முதலிடம் கொரோனாவல்  பலி எண்ணிக்கை 19,666 ஆக அதிகரித்துள்ளது.

*இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,849 ஆக அதிகரித்துள்ளது.

*ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 16,353 ஆக அதிகரித்துள்ளது.

*பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,958 ஆக அதிகரித்துள்ளது.

*பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,197 ஆக அதிகரித்துள்ளது.

*கொரோனாவால் ஈரானில் 4,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஜெர்மனியில் 2,767 பேரும், பெல்ஜியத்தில் 3,019 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

*நெதர்லாந்து 2,511 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

*துருக்கியில் 1,006 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,002 பேரும் பிரேசில் நாட்டில் 1,068 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,529 அதிகரிப்பு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 242 ஆக அதிகரிப்பு கொரோனாவில் இருந்து 653 பேர் குணம் அடைந்துள்ளனர்.

*மும்பையில் இன்று ஒரே நாளில் கொரோனாவினால் 11 பேர் உயிரிழப்பு; 189 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது! மும்பையில் பலி எண்ணிக்கை 75ஆக அதிகரிப்பு; இதுவரை 1,182 பேருக்கு கொரோனா பாதிப்பு!

* தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969 ஆக உயர்வு. இன்றுவரை கொரோனவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 அதிகரிப்பு.

* டில்லியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 166 பேர் அங்கு மொத்தம் 1069 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 27 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

*விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.
சேலம்: ஆத்தூர் சதாசிவபுரத்தில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட ஜவ்வரிசி ஆலையில் பணிபுரிந்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் உயிரிழப்பு.

*கொரோனா புதுவையில்
முதல் பல கொரோனாவுக்கு புதுச்சேரி மாநிலத்தில் முதல் பலி. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 71 வயது முதியவர் உயிரிழப்பு.மாஹே பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்ததாக, புதுச்சேரி சுகாதார துறை தகவல்.

*தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்:

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே எடுக்கவேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை அரசு உடனே உறுதி  செய்யவேண்டும்.

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எம்.எல்.ஏக்களின் தார்மீக  உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. மக்கள் நலனுக்காகதான் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்துகிறார்கள்.

கொரானோ நிவாரணமாக குறைந்தபட்சம் 5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு அளிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனையில் கொரானோ பரிசோதனையை இலவசமாக்க வேண்டும்.
கொரானோ நோய்த்தொற்றால் தமிழக மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் - மு.க.ஸ்டாலின்.

*சென்னையில், 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ:
மருத்துவர் பணியாற்றிய, மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட உள்ளதாக தகவல். மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்ய முடிவு.

*சென்னையில் 44 வயது ஆண் மருத்துவருக்கு  கொரோனோ.
கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியாது.

*எல்லைப்பகுதியில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் 4 எல்லை பகுதியிலும் போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

*மேட்டூரில் கொரோனா பரவ காரணமாக இருந்ததாக அனல்மின் நிலைய உதவி செயற்பொறியாளர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு! அரசு அறிவுறுத்தியும் பரிசோதனைக்கு வராமல் மறைத்ததாக விஏஓ புகார்!

*ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு  உலகில் அன்பு, அமைதி நிறைந்திட இயேசு போதித்த உயரிய குணங்களை பின்பற்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். - முதல்வர் பழனிசாமி வாழ்த்து

*சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84 வயது மூதாட்டி குணமடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து மூதாட்டி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று டிஸ்சார்ஜ்.

*தமிழகம் முழுவதும் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 1.40 லட்சம் வழக்குகள் பதிவு:
1.19 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை.
53.72 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு.

*இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறியதற்கு இதுவரை ஆதாரமில்லை என்று மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலிடம் (Lav Agarwal, joint secretary in the health ministry) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள், கொரோனா பாதிப்பு நபர்களில் 40 சதவீதம் பேர் பயணம் மேற்கொண்டவர்கள் இல்லை, பயண பின்னணி கொண்டவர்கள் இல்லை என்று தெரிவிப்பது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு அவர், அந்த ஆய்வை வைத்து மட்டும் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியாது என்றும், அந்த ஆய்வுகள், கொரோனா பாதித்தோர் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

*அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் என அமெரிக்க மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

*மராட்டியம், பஞ்சாப்,தில்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்கவேண்டும் என கோரியுள்ளதாக தகவல்

*ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் -ஏ.எம் விக்கிரமராஜா:

தேவைக்கு அதிகமாக எந்த பொருட்களையும் பொதுமக்கள் வாங்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

சென்னையில் கடை திறப்பு நேரத்தை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று மாலை சென்னை மாநகர காவல் ஆணையரை சந்திக்க உள்ளோம் - ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்.

*"15 நாட்களுக்கும் மேலாக சிறு குறு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருப்பதால் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும்! வணிக ரீதியான மின் இணைப்புகளுக்கு கட்டணம் செலுத்த உரிய சலுகை வழங்க  வேண்டும்!
- டி.டி.வி.தினகரன்.

*கோவை தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்க சென்ற நபர் கைது எச்சரிக்கையை மீறி கொரோனா அறிகுறி உள்ளவரின் வீட்டிற்கு சென்றவர் கைது. தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்க சென்ற கோவையை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் கைது.

*கொரோனா பாதிப்பு - திருவண்ணாமலையில் சிகிச்சை பெற்றவர் குணமடைந்தார்:

சென்னை வேளச்சேரி, பிரபல வணிக வளாகத்தில் பணிபுரிந்தவர் கொரோனாவால் பாதிப்பு.

28 நாட்கள் சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார். இன்று மட்டும் 80 வயது பெண் உட்பட 4 பேர் குணமடைந்ததால், மருத்துவர்கள் மகிழ்ச்சி.

*இரட்டைக்குழல் துப்பாக்கியாக இரு முனைகளிலும் நிவாரண உதவி செய்து பேரழிவிலிருந்து மக்களை காக்க வேண்டும்: பட்டினியிலிருந்து மக்களை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. - கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி தலைவர்.

*கொரோனாவை விரைவாக கண்டறியும் "ரேபிட் டெஸ்ட்" கருவி இன்னும் இந்தியாவுக்கே
வரவில்லை. ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை.

விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. முகக் கவசம், கையுறை அணிந்து செய்தித்தாளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சி ஆணையர்.

*விழுப்புரம் நகராட்சியின் 42 வார்டுகளில் வாரம் ஒரு முறை மட்டுமே மக்கள் மளிகைக் பொருட்களை வாங்க அனுமதி. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை 6 பிரிவுகளாக பிரித்து பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுவர்-ஆட்சியர் அறிவிப்பு.

*புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும்;உத்தரவை மீறும் மளிகைகடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை- ஆட்சியர் உமா மகேஸ்வரி. திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட 3 நாட்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் செயல்பட அனுமதி.

*ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியே கொரோனாவில் இருந்து மக்கள் உயிரை காப்பாற்றும்-பிரதமர் நரேந்திர மோடி கருத்து.

*இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவு; இது சரியான முடிவு - கெஜ்ரிவால் டிவிட்டரில் தகவல்.

*ஊரடங்கை நீட்டிப்பது என, பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தகவல்.

வளர்ந்த நாடுகளை விட இந்தியா எடுத்த நடவடிக்கை சிறப்பானது - கெஜ்ரிவால். ஊரடங்கை தொடராவிட்டால் இதுவரை எடுத்த நடவடிக்கை வீணாகி விடும். நிலைமை கட்டுக்குள் வைக்க ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என்றும் கெஜ்ரிவால் கருத்து.

*வேளாண்மை துறைக்கு என தனிச் சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - முதலமைச்சர்.

*கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். - மத்திய உள்துறை அமைச்சகம்.

*தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை.

பருப்பு, மசாலா பொருட்கள் மாநிலங்களுக்கு  லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும்.
வேளாண், தோட்டக்கலைத்துறைக்கு சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.2,000 வழங்க வேண்டும். - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை.

*"ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் ஏப்ரல்15க்குள் நாட்டில் 8.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர்.." -லாவ் அகர்வால், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்.

*கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் மண்டல வாரியாக சிறப்புக் குழு அமைப்பு. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவுடன் சிறப்பு நடவடிக்கைக் குழு இணைந்து செயல்படும்- அரசாணை.

*மேற்குவங்கத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை- முதல்வர் மமதா பானர்ஜி.

*மகாராஷ்டிராவில் வரும் 30 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் உத்தவ்தாக்கரே. பஞ்சாப், ஒடிசா மாநிலங்கள் நீட்டித்த நிலையில் மகாராஷ்டிராவிலும் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு.

*நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு:தமிழக தலைமைச் செயலாளர்

பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு. ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு அமைச்சரவை பாராட்டு.
காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அமைச்சரவை  நன்றி.

கொரோனா சோதனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளது. கொரோனா கண்காணிப்பில் 47056 நபர்கள் உள்ளனர். தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969 ஆக உயர்வு.

*மும்பையில் இன்று ஒரே நாளில் கொரோனாவினால் 11 பேர் உயிரிழப்பு; 189 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது! மும்பையில் பலி எண்ணிக்கை 75ஆக அதிகரிப்பு; இதுவரை 1,182 பேருக்கு கொரோனா பாதிப்பு!

*தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை - தலைமைச் செயலாளர் சண்முகம்.
தமிழகத்தில் கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages