அக்னிப்புரட்சி (12.04.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (12.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (12.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும்  17,96 லட்சம் பேர் பாதிப்பு.

*கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,08,770 பேர் உலகம் முழுவதும் உயிரிழப்பு.

*கொரோனாவால் உலகிலேயே நேற்று மிக அதிகமாக அமெரிக்காவில் 1830 பேர் உயிரிழப்பு.

*யுனைடெட் கிங்டமில் நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழப்பு.

*பிரான்சில் நேற்று ஒரே நாளில் 635 பேரும், இத்தாலில் 619 பேரும் பலி.

*உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 402709 பேர் குணடைந்தனர்.

*இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 242லிருந்து 273 ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7529லிருந்து 8,356 ஆக அதிகரிப்பு.

கொரோனா பாதித்தவரோடு தொடர்பில் இருந்த யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். - சேலம் மாநகராட்சி.

1,86,906 ரத்த மாதிரிகள் இன்று வரை சோதனை செய்யப்பட்டுள்ளன.
7,953 மாதிரிகள் - 4.3% கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களில், ஒரு நாளைக்கு சராசரியாக 15,747 ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன.

சராசரியாக ஒரு நாளைக்கு 584 மாதிரிகள் கொரோனா இருப்பது கண்டறியப்படுகிறது -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்.

*தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 969 லிருந்து 1075 ஆக அதிகரிப்பு.

8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று 4 தனியார் மற்றும் 4 அரசு மருத்துவர்களுக்கு பாதிப்பு.
"தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தாலும் செலவை அரசே ஏற்கும்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு. கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர்.

58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.
10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன - சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

*திமுக முன்னாள் விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தர நீக்கம்-திமுக.

*ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட். இந்த ஈஸ்டர் திருநாள், கொரோனாவை எதிர்கொள்ள அனைவருக்கும் கூடுதல் வலிமையை அளிக்கட்டும் - பிரதமர் மோடி.

*கொரோனாவால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். நேற்று இரவு, புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது பெண் உயிரிழப்பு.
கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு

*சென்னை வேளச்சேரி பினிக்ஸ் மாலுக்கு சென்றவர்களில் கொரோனா உறுதியான நபர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு. செஞ்சியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது - தமிழக சுகாதாரத்துறை.

*தமிழகத்தில் 144 தடை உத்தரவால் ஏப்.14 அம்பேத்கர் பிறந்தநாள், ஏப்-17 தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம். ஊரடங்கு அமலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் மரியாதை செலுத்துவர் - தமிழக அரசு.

*திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு. மருத்துவர்கள் மீது கொரோனா பாதித்த நபர் எச்சில் துப்பி, முக கவசத்தை வீசியதாக புகார்.

*நாகையில் மலர் மருத்துவமனையின் மருத்துவர் குமரப்பனுக்கு கொரோனா

குமரப்பனிடம் மருத்துவம் பார்த்தவர்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள்
குமரப்பனிடம் சிகிச்சை பெற்றவர்கள் 9751425002, 9500493022 என்ற எண்களில் தகவல் தரலாம் - ஆட்சியர் பிரவீன் நாயர்

*சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவிப்பு:

*கடந்த 4 நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்த நிலையில் நடவடிக்கை.

*'தன்னார்வலர்கள் தனியாக பொருட்கள் தர அரசு தடை':

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை.

நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம்.

சமைத்த உணவுகள், நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது. அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக கருதி சட்டப்படி நடவடிக்கை.
- தமிழக அரசு.

*சேலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட பகுதியை சுற்றி 3 கி.மீ. தொலைவிற்கு எந்த கடைகளையும் திறக்க கூடாது; அடிப்படை தேவைகள் வீடு தேடிச்சென்று வழங்கப்படும்.

* டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.
டெல்லி நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவு.

*வீடு திரும்பினார் பிரதமர் போரிஸ் ஜான்சன்: கொரோனா  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார். வீடு திரும்பினாலும்; அரசு பணியயை தற்போது தொடரமுடியாது என மருத்துவர்கள் தகவல்.

*திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் காய்கறி சந்தைகள், கடைகள், பேக்கரிகளில் நேரடி விற்பனைக்கு  தடை:
ஆர்டரின் பெயரில் வீடுகளில் நேரடி விநியோகத்திற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிரடி உத்தரவு.

*ஏப்.15 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசனை
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏப்.15 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம்.

*பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு.
ஜம்மு-காஷ்மீர்: குப்வாரா மாவட்டம் ராங்வார் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு குடியிருப்பு பகுதிகள் மீது பாக். ராணுவம் பீரங்கி குண்டுகளால் தாக்கியதில் பொதுமக்கள் 3 பேர் பலி

*என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்கள். என மக்கள் நீதிமையம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages