அக்னிப்புரட்சி (15.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனா பாதிப்பு 20.44 லட்சத்தை நெருங்கியது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20.44 லட்சம் ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,31 லட்சம் ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 5.05 லட்சம் ஆக உயர்வு.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,22 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,047 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 26,945 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலி 21,067;
ஸ்பெயின் - 18,255;
பிரான்ஸ் 15, 729;
இங்கிலாந்து 12,107 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
*இந்தியாவில் கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 லிருந்து 11,933 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 377 லிருந்து 392 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,306 லிருந்து 1,344 ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
*இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக மாறவில்லை.
சில இடங்களில் உள்ளூர் தொற்றாகவே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை தகவல்.
*தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1204 லிருந்து 1242 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இருவர் பலி!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவினால் 14 பேர் உயிரிழப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*நான்காம் இடத்தில் தமிழ்நாடு!
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3ம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு சென்றது .
1. மகாராஷ்டிர -2784
2.டெல்லி - 1,561
3. ராஜஸ்தான் - 1,304
4.தமிழ்நாடு -1,242
5. மத்திய பிரதேசம் -741
*கொரோனாவால் பாதிக்கப்பட 118 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல்!
*முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டிக்கொலை.
கடலும் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அதிமுகவினர் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டி கொலை பதட்டம் காரணமாக போலீஸ்குவிப்பு.
*புதுச்சேரியில் தடையை மீறி நடத்தப்பட்ட 22 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.
*உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதி நிறுத்திவைப்பு-அதிபர் ட்ரம்ப்.
*'பொது இடங்களில் எச்சில் துப்ப தடை - மீறினால் ரூ.500 அபராதம்' ஒடிசா: கஞ்சம் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை - மீறினால் ரூ.500 அபராதம் என அறிவிப்பு.
*கடலூர்: ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்ததில் மேலும் 2 பேர் உயிரிழப்பு.
ஏற்கனவே சந்திரகாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாயக்கிருஷ்ணன், சுந்தர் ஆகியோர் உயிரிழப்பு.
*ஏப்ரல் 20 முதல் கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம்!
ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி! அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம் - மத்திய அரசு!
*சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
"காய்கறி, இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க ஆணை; காலை, மாலை என இருவேளையும் பறக்கும் படையினர் கண்காணிக்க வேண்டும்; உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!" - சென்னை மாநகராட்சி!
*வானிலை!
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்; பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் பதிவாகும்!" - வானிலை ஆய்வு மையம்!
*மும்பையில் கொரோனா!
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவி குடிசைப்பகுதியில், வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு..!
இதுவரை 7 பேர் பலி.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு..!
*தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்.
*தமிழகத்தில் ரூ.134 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வந்துள்ளது - தமிழக அரசு.
*"சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்" சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை.
ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்படும் எனவும் அறிவிப்பு.
முக கவசம் அணியாமல் வெளியே வரும் பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம்.
*டாடா நிறுவனம் உதவி - முதல்வர் பழனிசாமி நன்றி:
ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்;
கொரோனா தொற்றை கண்டறிய உதவும் பிசிஆர் கருவிகளை வழங்கியதற்காக டாடா நிறுவனத்திற்கு முதல்வர் பழனிசாமி நன்றி!
*2020 ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு:
பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் 2வது முறையாக ஒத்திவைப்பு.
*7 நாள் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி முடிவு செய்துள்ளார். தன்னை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரானுக்கு கொரோனா உறுதியானதால் குஜராத் முதல்வர் முடிவு.
*கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரிய வழக்கு - மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை தற்போது சோதித்துப் பார்க்க முடியாது.
கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருங்கள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மனுவை நிராகரித்தது.
*அண்ணாமலைப் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
ஊரடங்கு உத்தரவு மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வி தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தகவல். புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு.
*நான் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை?! அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
நான் பல மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது, வீடியோ கான்ஃபரன்சிங் செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் முதல்வர் உத்தரவுபடி சுகாதாரத்துறை செயலர் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை வழங்கி வந்தார்.
இதுதானே தவிர, வேறு விதமான சிந்தனைக்கு நீங்கள் செல்லவேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
No comments:
Post a Comment