மார்ச் 16ஆம் தேதியில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது; தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.- அமைச்சர் ஜெயக்குமார்.
பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் விளக்கம் தந்தார்.
நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணமாக இருந்துள்ளது. பேரவைக்கு வந்தால் கொரோனா பரவும்; வெளியே சென்று பொது கூட்டத்தில் கலந்து கொண்டால் கொரோனா பரவாது; இது தான் ஸ்டாலினின் பாணி
முதல்வரின் யதார்த்தமான கருத்துகளை கூட ஸ்டாலின் விமர்சிக்கிறார். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் கூட அதிமுக அரசில் எந்தக் குறைகளையும் காண முடியாது. அதிமுக அரசை மக்கள் பாராட்டும் நிலையில், அதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்.
No comments:
Post a Comment