எபோலாவுக்கு இளைஞர் உயிரிழப்பு: கொரோனாவைத் தொடர்ந்து அச்சுறுத்த வருகிறது எபோலா காய்ச்சல்..! - Agnipuratchi

எபோலாவுக்கு இளைஞர் உயிரிழப்பு: கொரோனாவைத் தொடர்ந்து அச்சுறுத்த வருகிறது எபோலா காய்ச்சல்..!

Share This

எபோலாவுக்கு இளைஞர் உயிரிழப்பு: கொரோனாவைத் தொடர்ந்து அச்சுறுத்த வருகிறது எபோலா காய்ச்சல்..!

உயிர்க்கொல்லி நோயான கொரோனா ஒருபுறம் மக்களை அழித்து வரும் நிலையில், காங்கோ நாட்டில் ஆட்கொல்லி நோயான எபோலாவுக்கு ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 215 பாதிக்கப்பட்டதில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் ஆட்கொல்லி நோயான எபோலாவும் அங்கு பரவி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கிழக்கு காங்கோவின் பெனி என்ற இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காய்ச்சல் உள்ளிட்ட சில உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 50 நாட்கள் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டும், அவை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், சோதனையின் போது அந்த இளைஞருக்கு எபோலா காய்ச்சல் தாக்கியிருப்பதாகவும் பெனி நகர மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் எபோலா காய்ச்சலால் கடந்த 2018ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எபோலா நோய் தாக்கியதில் சுமார் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை உலகத்தில் கண்டறிந்தவற்றில் அபாயகர ஆட்கொல்லி நோய் இதுதான் என உலக சுகாதார மையம் ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில், இதற்குத் தடுப்பு மருந்துகள், குணப்படுத்தும் மருந்துகள் என எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவத் தொடங்கிய பின், மனிதர்களிடையே நோய்த் தொற்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages