அக்னிப்புரட்சி (16.04.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (16.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (16.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,82,822 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,603 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,10,046 ஆக உயர்வு.

*அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,44,089 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில்  கொரோனாவுக்கு 20,900 பேர்  உயிரிழப்பு.
இத்தாலி - 21,600
ஸ்பெயின் -19,100
ஐரோப்பிய - 12,900
பெல்ஜியம் -   4,800      

*இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1514 ஆகும்.   இதனால்  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை12,759 ஆக உயர்வு குணமடைந்தோர்- 1489, உயிரிழப்பு - 420 ஆகும். இந்தியாவிலேயே 325 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.

*தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆகும்.   இதனால்  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1267 ஆக உயர்வு குணமடைந்தோர்- 180,   ஆகும். கொரோனாவால் உயிரிழப்பு - 15 ஆகும். என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.

*திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

32 பேரையும் 6 வேன்கள், ஒரு பேருந்தில் ஆட்சியர் சிவராசு, மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோர் கைதட்டி அவர்களது வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

*சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இன்று மாலை 6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வர உள்ளதாக தகவல்.

கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்த பிறகு மாநிலங்களுக்கு அவை பிரித்துக்கொடுக்கப்படும்.

*விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு:

பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயதான முதியவர் காய்ச்சலால் பாதிப்பு கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல் படி, முதியவர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு. உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரி சோதனை முடிவு இதுவரை வெளியாகவில்லை.

*முதல்வர் பழனிசாமி காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை:
மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்து வருகிறார்.

*'இந்தோனேஷியர்கள் 16 பேர் சிறையில் அடைப்பு':
சேலத்தில் கொரோனாவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட இந்தோனேஷியர்கள் 16 பேர் புழல் சிறையில் அடைப்பு.

*மருத்துவம் மற்றும் மோட்டார் காப்பீடுகளை புதுப்பிக்க மே 15 வரை அவகாசம் நீட்டிப்பு.

*இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் என்றும், இயல்பான அளவில் பருவமழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

தென்மேற்கு பருவமழை காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தில் பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழை இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக மழை பெய்தது.

*டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா - தனிமைப்படுத்தி கொள்ள 72 குடும்பத்தினருக்கு அறிவுறுத்தல்.

*தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,08,139 பேர் கைதாகி ஜாமீனில் விடுதலை:

1,79,827 - வாகனங்கள் பறிமுதல்.

1,94,995 - வழக்குகள் பதிவு.

ரூ. 89,23,644 - அபராதம் வசூலிப்பு - தமிழக காவல்துறை.

*பார்சல் சிறப்பு ரயில்கள் சேவை மே 3ம் தேதி வரை நீட்டிப்பு:

எழும்பூர் - நாகர்கோவில், சென்ட்ரல் - கோவை, சென்ட்ரல் - டெல்லி பார்சல் ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம் - தெற்கு ரயில்வே.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.

*மெத்தனால் குடித்து பலி - ஆலைக்கு  நோட்டீஸ்:

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம்.
மெத்தனால் வெளியே சென்றது குறித்து  15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவு.

கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ்.

ஆலை ஊழியர் விற்ற மெத்தனாலை குடித்து 3 பேர் உயிரிழப்பு - ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages