அக்னிப்புரட்சி (17.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (17.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (17.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.

உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,45,507.

உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1,45,507 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,81,758 ஆகவும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் ஓயாத மரண அலைகள்- ஒரே நாளில் 2137 பேர் பலி- உயிரிழப்பு 34,617 ஆக உயர்வு.
அமெரிக்காவில் மொத்தம் 6,77,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,170 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 19,315 பேரும் பிரான்ஸில் 17,920 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இங்கிலாந்தில் நேற்று மட்டும் 861 பேர் மரணம்! இங்கிலாந்தில் இன்று வரை 13,729 பேர் இறந்துள்ளனர், ஈரானில் 4,869, ஜெர்மனியில் 4,052, பெல்ஜியத்தில் 4,857 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

சிங்கப்பூரில் கொரோனா பயங்கர தாக்குதல்- ஒரே நாளில் 728 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது.

நாடு முழுவதும் 13387 பேர் கொரோனாவால் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 437 ஆக அதிகரிப்பு.
1749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்-மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages