அக்னிப்புரட்சி (17.04.2020) இன்றைய காலை செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (17.04.2020) இன்றைய காலை செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (17.04.2020) இன்றைய காலை செய்திகள்.

உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,47,507.

உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1,47,507 ஆகவும். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,81,758 ஆகவும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் ஓயாத மரண அலைகள்- ஒரே நாளில் 2137 பேர் பலி- உயிரிழப்பு 34,617 ஆக உயர்வு.
அமெரிக்காவில் மொத்தம் 6,77,570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,170 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 19,315 பேரும் பிரான்ஸில் 17,920 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இங்கிலாந்தில் நேற்று மட்டும் 861 பேர் மரணம்! இங்கிலாந்தில் இன்று வரை 13,729 பேர் இறந்துள்ளனர், ஈரானில் 4,869, ஜெர்மனியில் 4,052, பெல்ஜியத்தில் 4,857 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

சிங்கப்பூரில் கொரோனா பயங்கர தாக்குதல்- ஒரே நாளில் 728 பேருக்கு பாதிப்பு!

*இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387லிருந்து 13,835 ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந் தவர்களின் எண்ணிக்கை 1749லிருந்து 1767ஆக அதிகரிப்பு.

*மகாராஷ்டிராவில் 3,000ஐ கடந்தது!
மும்பையில் 107 பேர் உட்பட மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 165 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மாநிலத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,081ஆக உயர்ந்தது.

*தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323ஆக உயர்வு.

*அரசியலுக்காக மக்களை தூண்டும் விதமாக பேசும் ப.சிதம்பரம், ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்; இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமே பாராட்டி உள்ளது; கமல் பதிவு முட்டாள்தனமானது!" -  ஹெச்.ராஜா.

*மாணவர்களிடம் கல்விக்கட்டணம் கேட்டு வற்புறுத்தக்கூடாது - பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுரை நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் உத்தரவு.

*பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க ஊரடங்கு மட்டுமே தீர்வாக அமையாது. கொரோனா தடுப்பை கேரளம் வெற்றிகரமாக கையாண்டு வருகிறது. - ராகுல் காந்தி.

*அடுத்த 48 மணிநேரத்தில் மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் 39-40 டிகிரி வரை பதிவாகும்; தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்!" - வானிலை ஆய்வு மையம்.

*டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்க கோரிய வழக்கு-சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி.

திடீரென மது அருந்துவதை நிறுத்தியதால் சுவாச பிரச்சினை ஏற்பட்டது- மனுதாரர்.

மதுக்கடைகளை திறக்க அனுமதித்த கேரளா முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை - தமிழக அரசு.

அசாம், கேரளா மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது - தமிழக அரசு.

*ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதன் எதிரொலி.
செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தின் தொடக்கத்தின்போது நடத்தப்படும்-உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு.

*ஊரடங்கால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலி 3 வாரங்களுக்குள் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்-விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.

மே 3ம் தேதி வரை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு. தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்  - மத்திய பணியாளர்கள் தேர்வாணையம்.

*ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி அந்தந்த பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் - தலைமை செயலாளர்.

நோன்பு கஞ்சி காய்ச்சிக் கொள்வதற்காக டோக்கன் மூலம் வீடுகளுக்கு அரிசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

தொழுகை மற்றும் நோன்பு கஞ்சி செய்வதை அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது - தலைமை செயலாளர்.

*பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி- ஆட்சியர் கண்ணன்.

*சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 956 பட்டாசு ஆலைகளும் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி- ஆட்சியர் கண்ணன்.

* கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளும் "ரேபிட் டெஸ்ட் கருவிகள்" தமிழகம் வந்தடைந்தன.

*தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2,18,533 பேர் கைது - 2,05,054 வழக்குகள் பதிவு. 1.85 லட்சம் வாகனங்கள் பறிமுதல் - ரூ.98.07 லட்சம் அபராதம் வசூல் - தமிழக காவல்துறை.

*கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு ஜூன் மாதத்திலேயே முடிவுகளை வெளியிட உயர்கல்வித் துறை முடிவு. - உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தகவல்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் திறந்த உடன் இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை. வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

*பொறியியல் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும்  தள்ளி வைப்பு.
தமிழக அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு.

*சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று. 34 வயது மருத்துவர், தனிமைப்படுத் தப்பட்டு தீவிர சிகிச்சை. உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம் மூடப்பட்டது. இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை. மருத்துவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு.

*நாமக்கல் : பரமத்திவேலூர் அருகே யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது. 5 லிட்டர் சாராயம் பறிமுதல்.

*வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும்.-தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு.

பணியாளர்கள் பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும். பணியாளர்கள் முகக்கவசம் அணிந்துவருவது கட்டாயம்.
சமூகவிலகலை கடைபிடித்து வேலைசெய்ய வேண்டும்.

*100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்வு:
மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

*நாமக்கல்: அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த 15ஆம் தேதி மோகனூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற 2 பேருக்கு கொரோனா உறுதி.

*மதுரை சித்திரை திருவிழா ரத்து: ஏப். 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.

மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை கோயில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு. மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கலநாணை மாற்ற அறிவுரை. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages