அக்னிப்புரட்சி (19.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (19.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (19.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.

*உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,30,856 ஆக அதிகரிப்பு.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,96,488ஆக உயர்வு.

கொரோனாவுக்கு பாதித்தவர்கள் ஸ்பெயினில் 1,94,416 பேரும், இத்தாலியில் 1,75,925 பேரும் பாதிப்பு

ஸ்பெயினில் உயிரிழந்தோர் 20,639 பேரும், இத்தாலியில் 23,227 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

*இந்தியாவில் மேலும் 920 பேருக்கு கொரோனா...!:

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,792லிருந்து 15,712 ஆக அதிகரிப்பு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 488லிருந்து 507ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 2,015லிருந்து 2,231ஆக அதிகரிப்பு.

*கடற்படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று:

மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு; நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கடற்படை அதிகாரிகள் தகவல்!

மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7ஆம் தேதி மும்பை கடற்படை தளத்தில் ஒருவருக்கு நோயத் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அங்கு பணியில் இருந்த மேலும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அனைத்து கடற்படை தளங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*கடலூர் மற்றும் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு:

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழப்பு.
ஈரோட்டில் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்தார். உயிரிழந்த இருவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages