அக்னிப்புரட்சி (22.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 7,040 பேர் பலி.
*உலகம் முழுவதும் கொரோனாவால் 1,77,437 பேர் இதுவரை உயிரிழப்பு.
*உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 25,56,236,
*எங்கும் மரண ஓலங்கள், நிலைகுலைந்தது அமெரிக்கா, 24 மணி நேரத்தில் 2800 பேர் உயிரிழப்பு.
*அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,800 பேர் உயிரிழப்பு.
*அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,19,620.
*அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,314.
*இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 828, ஸ்பெயினில் 430, இத்தாலியில் 534, பிரான்ஸ் 531, ஜெர்மனி 224 பேர் உயிரிழப்பு.
*இந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை1,486 பேர் இதோடு சேர்த்து 19,984 லிருந்து 20471 ஆக அதிகரிப்பு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 லிருந்து 652 ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரிப்பு
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழப்பு. - மத்திய அரசு அறிவிப்பு.
* தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது.
கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்கள் 27 பேர் இதோடு சேர்த்து மொத்தம் 662 பேர் குணமாகியுள்ளனர் - சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
*சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு:
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் மாநகர போலீஸார் அதிரடி. தடையை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு.
சென்னையில் நேற்று மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்க கூடாது:
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு சில வீட்டின் உரிமையாளர்கள் நெருக்கடி என புகார்.
*வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்தார் டிரம்ப்.
அடுத்த 60 நாட்களுக்கு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற தடை.
கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் வெளிநாட்டினர் குடியேற தற்காலிக தடை.
இந்தியர்கள் உள்பட எந்த வெளிநாட்டினரும் அமெரிக்காவில் குடியேற முடியாது.
கொரோனாவால் வேலையில்லாமல் தவிக்கும் அமெரிக்கர்களுக்கு இந்த தடை உதவும்.
இந்த தடையால் அமெரிக்கர்கள் மீண்டும் வேலை தேட முடியும் என்று டிரம்ப் தகவல்.
*கொரோனா தடுப்பு மருந்து- நாளை முதல் மனிதர்களிடம் சோதனை தொடக்கம் இங்கிலாந்து.
கொரோனா தடுப்பு மருந்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
*சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு. தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக்கு அறிவுறுத்தல்.
*மருத்துவர் சைமன் உடல் நல்லடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை கண்டிக்கும் வகையில் சென்னையில் அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
*கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி:
அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம்.
கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.
- எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்.
*சென்னை: மாநகராட்சி முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளான ஏப்ரல் 26, மே 3-ல் முழு அடைப்பு அவசியம். மருத்துவமனை, மருந்துகங்களை தவிர பிற கடைகள் மூடப்பட வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்த 2 நாட்களிலும் முழு ஊரடங்கு பற்றி மாநகராட்சி, தமிழக அரசு அறிவிக்க வேண்டும். - ஜி.கே.வாசன்.
*‘மருத்துவர்களுடன் காணொலியில் முதல்வர் ஆலோசனை...
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், செவிலியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை.
*தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு:
ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,55,538 வழக்குகள் பதிவு.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.46 கோடி அபராதம் வசூலிப்பு.
*கொரோனாவுக்கு எதிராக செயலி உருவாக்க அழைப்பு...!
கொரோனாவுக்கு எதிராக செயலி, இணையதளங்களை உருவாக்க ஐடி தொழில்நுட்ப மாணவர்கள், அத்துறை பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு.
பேரிடரில் இருந்து மக்களை காக்க பல்வேறு தளங்களை ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு எதிராக செயலியை உருவாக்க வேண்டும்.
சிறந்த செயலி, இணையதளங்களை உருவாக்கினால் தேசிய அளவில் பரிசு; உரிய வேலைக்கும் வாய்ப்பு. - அண்ணா பல்கலைக்கழகம்.
*மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும்.
ரேஷன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும. - தமிழக அரசு.
*காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்!. சதிச் செயல் நிகழ்த்த பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
*மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் உரையாடினார்:
மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும், மருத்துவர்கள் அடையாள போராட்டங்களை கைவிட வேண்டும் - அமித்ஷா.
*குணமடைந்த பெண்ணுடன் முதல்வர் பேசினார்...!.
சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த பெண்ணுடன் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், உடல்நிலை குறித்தும் காணொலியில் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.
*புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை. நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்.
*பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பரிசோதனை கொரோனா பரிசோதனையை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
*சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டனர். - மருத்துவமனை டீன் அழைத்து பேசிய நிலையில், இன்று மதியம் 3மணி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட மருத்துவர்கள் முடிவு செய்திருந்த நிலையில் வாபஸ்.
*கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது:
தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம். விவரங்களை வெளியிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.
*கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆறுதல்:
மருத்துவரின் மனைவி, மகனுடன் தொலைபேசியில் முதலமைச்சர் பேசினார். எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்க முதலமைச்சர் ஆறுதல்.
*மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாத பங்காக ரூ.46,038 கோடி வழங்கப்பட்டுள்ளது:
தமிழகத்திற்கு ஏப்ரல் மாத பங்காக ரூ.1,928.56 கோடி வழங்கப்பட்டுள்ளது - மத்திய நிதியமைச்சகம்.
*ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல். ஏற்கனவே மே.3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை.
*மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி. தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது? - ஸ்டாலின்.
*கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம்.
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு- பேராயர் ஜார்ஜ் அந்தோணி.
*மேற்கு வங்கத்தில் குறைந்த அளவில் கொரோனா பரிசோதனை செய்வதாக வரும் தகவலில் உண்மை இல்லை; இதுவரை 7,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
*மருத்துவம் மற்றும் சுகாதார ஊழியர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை. மருத்துவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.
No comments:
Post a Comment