உலக பூமி தினம் ஏப்ரல் 22. நிலம், நீர்,காற்று மாசுபடாமல் காத்து, புவி அதிக வெப்பமடைதலை கட்டுப்படுத்த, அனைத்து உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ, உரிய நடைமுறைகளை பின்பற்ற உறுதியேற்போம் - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

உலக பூமி தினம் ஏப்ரல் 22. நிலம், நீர்,காற்று மாசுபடாமல் காத்து, புவி அதிக வெப்பமடைதலை கட்டுப்படுத்த, அனைத்து உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ, உரிய நடைமுறைகளை பின்பற்ற உறுதியேற்போம் - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

உலக பூமி தினம் ஏப்ரல் 22. நிலம், நீர்,காற்று மாசுபடாமல் காத்து, புவி அதிக வெப்பமடைதலை கட்டுப்படுத்த, அனைத்து உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ, உரிய நடைமுறைகளை பின்பற்ற உறுதியேற்போம் - பாமக தலைவர் ஜி. கே. மணி        
-—————— -—————— -——————
          
மனிதனுக்கு உடலில் 1 சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்தால் காய்ச்சல் அதிகரித்து விட்டது என மருத்துவர்களிடம் ஓடும் நிலை. ஆனால் பூமி 1.3 சென்டிகிரேட் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இது ஒட்டு மொத்த மனித குலத்துக்கு, உலகுக்கே பெருங்காய்ச்சல், போழிவு. இன்று கொரோனாவாக வந்துள்ளது.
           
நமது முன்னோர்கள், ஆட்சி செய்த மன்னர்கள் பூமியை தெய்வமாக போற்றி வணங்கினார்கள். இன்று என்ன நிலை ? பேராபத்தே விளைந்துள்ளது. இதைப் போக்கிடும் வகையில் ஐ.நா.மன்ற முடிவின்படி கடந்த 50 ஆண்டுகளாக உலக பூமி தினம் எல்லா நாடுகளிலும்அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அதனை நாடுகள் பின்பற்றப்படவில்லை. உலகில் வெப்பநிலை அதிகரித்து இன்று கொரோனா பாதிப்பு அளவுக்கு வந்திருக்கிறது.               
             
இன்று நிலம், நீர், காற்று மாசு அதாவது சுற்றுச்சூழல் மாசுபடுதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. வாகனப் புகை, தொழிற்சாலைகள் இரசாயனப் கழிவுப் புகை போன்றவை காற்று மாசு,இராசயன உரங்களால் நிலம் கெடுதல், தொழிற்சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள் ஆறுகளில் ஓடைகளில் கலக்க விட்டு நீர் மாசுபாடு, குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் அழிப்பு-ஆக்கிரமிப்பு, நிலத்தில் 1000 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு, விவசாய உற்பத்தி அனைத்திற்கும்  இராசாய பூச்சி மருந்துகள் எனவும் காடுகள் அழிக்கப்படுதல், ஆற்று நீர் இராசயன் கழிவுகளால் நிறமே மாறிய நிலை பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படடும் சீர்கேடு போன்ற எண்ணற்ற சீர்கேடுகள், கணக்கிலடங்கா இயற்கை அழிவுகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.                    
            
இது போன்ற தொடர் சீர்கேடுகளினால் வெப்பநிலை அதிகரிப்பால் பனிமலைகளை உருகி வெள்ளப் பெருக்கு ஒரு பக்கம் ஏற்படும். கடுமையான வறட்சி உருவாகி குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கும் அவதி ஒரு பக்கம். கடுமையான மழை பெய்து வெள்ளச் சேதம் ஒரு பக்கம். வரலாறு காணாத சுனாமி போன்ற புயல்களின் பாதிப்பு ஒரு பக்கம். காடுகள் அழிவினால் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜன் குறைபாடு ஒரு பக்கம்.                      
          
மேலும் இது போன்ற இயற்கை மாற்றங்களினால் கடல் மட்டம் 6 அடி உயரும் என்ற ஆராய்ச்சியாளர்கள் கருத்து.மனித உயிர்களுக்கு கடுமையான நோய்கள் தாக்குதல் அதிகரிக்கும். இப்போது கொரோனா உயிர்க்கொல்லி உலகையே சீரழித்துக்கொண்டிருக்கிறது. மனித இனம் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் என்பதை உலக பூமி நாளில் மனிதிலே கொள்ள வேண்டும்.                          
           
இது போன்ற பிரச்சினைகளை பசுமைத்தாயகம் ஐ.நா.மன்றம் வரை குரல் எழுப்பி வருவதையும் பசுமைத் தாயகம் - பா.ம.க சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் மருத்துவர் அவர்களும் மருத்துவர் அன்புமணி M.P அவர்களும் அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி வருவதையும் அனைவராலும் அறிய முடியும்.            
              
எனவே நிலம், நீர், காற்று  மாசுபடாமல் காக்க மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் காக்க சர்வதேச பூமி தினத்தில் உறுதியேற்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages