சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - Agnipuratchi

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

Share This

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் உள்ள 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரம்.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது.

தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.

1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை. முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் வந்துள்ளன.

அம்மா உணவகங்கள் மூலம் சேலம் மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

பெரிய மளிகை கடைகள் மூலம் வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப் படுகின்றன.

மத்திய அரசு உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் மக்களின் தேவையை மாநில அரசு பூர்த்தி செய்யும். கொரோனா ஆய்வு பரிசோதனை துரித கதியில் நடந்து வருகின்றன.

அறிகுறி தெரிந்ததும், யாராக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். - முதல்வர் பழனிசாமி.

மருத்துவர்கள் தான் ஆலோசனை கூற முடியும். அரசியல்வாதிகள் எப்படி ஆலோசனை கூற முடியும்?

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றினால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும் என்றார். - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages