அக்னிப்புரட்சி (24.04.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (24.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (24.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,572 பேர் பலி.

உலகம் முழுவதும் கொரோனாவால் 1,90,499 இதுவரை உயிரிழப்பு.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 27,16,388.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,80,204.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,845.

*கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் மட்டும் 2,325 பேர் உயிரிழப்பு. இங்கிலாந்தில் 638, ஸ்பெயினில் 440, இத்தாலியில் 464, பிரான்ஸ் 516, ஜெர்மனி 260 பேர் உயிரிழப்பு.

*உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை:
புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர் களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!.

*இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,452 ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718லிருந்து 723 ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 490 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 4078 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்.

*தமிழகத்தில் மேலும் 72பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்வு கொரோனாவால் உயிர் இழந்தோர் 22 ஆக அதிகரிப்பு.

சென்னையில் மட்டும் இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 114 பேர் குணமடைந்தனர். இவர்களோடு சேர்ந்து 866 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று வரையில் 864 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*கோவையில் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தகவல்.

ஏற்கனவே 3 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு.

பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் தொற்று உறுதி - ஒரே நாளில் 7 பேருக்கு பாதிப்பு.

*சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா?- மண்டலம் வாரியாக விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி.

*மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் 71 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்று வெளியான மருத்துவ அறிக்கையின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பணியாளர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா உயிரிழப்பு வழிகாட்டுதல்படி உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்.

*ஒரே இடத்தில் 1000 பேர் குவிந்தனர்:
மதுரையில் வரும் 25,ம் தேதி முதல் QR CODE பெற்ற வாகனுங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்திரவினால் அதற்கு அனுமதி பெறுவதற்காக    மதுரை ஆட்சியர் வளாகத்தில் தற்போது 1000க்கும் மேற்ப்பட்டவர்கள் குவிந்து உள்ளனர்.

*ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,81,975 வழக்குகள் பதிவு.
விதிகளை மீறிய 2,52,943 வாகனங்கள் பறிமுதல். அபராதம் ரூ.2.91 கோடி விதிப்பு. 2,99,108 பேர் கைதாகி விடுதலை.

*புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறி 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வந்த தனியார் பாக்கு ஆலைக்கு சீல் வைப்பு.

*மகாராஷ்டிராவில் புதிதாக 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மேலும் 14 பேர் உயிரிழப்பு:
வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,427ஆக உயர்வு - இதுவரை 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

*கொரோனா பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் ஆலோசனை வழங்க வேண்டும்.
ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி.

*காங்கிரஸ். தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசிய பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரங்களுக்கு தடை - உச்சநீதிமன்றம்.

*கோவையில் இணையஇதழ் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது:

பேரிடர் நேரத்தில் ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை அரசு கைவிட வேண்டும். - மு.க.ஸ்டாலின்.

*கோவையில் இணையதள பத்திரிகையாளர் மீதான நடவடிக்கையை போலீசார் கைவிட வேண்டும். - டிடிவி தினகரன் ட்வீட்.

*மதுரையில் கனமழை!
இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது! நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!

*சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

*5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு: பெட்ரோல் பங்க் காலை 8 முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கலாம்.அச்சு ஊடகம், காட்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு தளர்வு.

*டெல்லியில் முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

*வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் மாதம்.

ரமலான் மாதத்தின் முதல் நோன்பு நாளை இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் அயூப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

*பெரம்பலூரில் ஏப்.27 வரை 3 நாட்களுக்கு  முழு ஊரடங்கு:

காய்கறி உட்பட எந்த கடைகளும் திறக்கத் தடை. பொதுமக்கள் 3 நாட்களுக்கு  வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தல்.
- மாவட்ட நிர்வாகம்.
பெரம்பலூர் பகுதியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நடவடிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages