அக்னிப்புரட்சி (25.04.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (25.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (25.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகில் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்த பாதிப்பு 28,27,047 ஆகவும் அதிகரித்தது.

கொரோனாவால் பலியானவர்கள் மொத்த 1,96,986 ஆகவும்,

இதுவரை 8,16,450 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

*அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,863 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 52,097 ஆக உயர்ந்தது.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,942 பேர். கொரோனாவால் பலியானவர்கள் 779 பேர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 5,210 பேர் குணமடைந்துள்ளனர்.

* மகாராட்டிர மாநிலத்தில் மேலும் 811 பேர் கொரோனா பாதிப்பு. மொத்தம் கொரோன பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,628 ஆக அதிகரிப்பு இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 பேர் இதோடு சேர்த்து மொத்தம் கொரோனா பலியானவர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரிப்பு.

*தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு.

இன்றுவரை 1821 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 94 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 960 பேர்  குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு.

*செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு. ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு.

புனிததோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் உட்பட 15 கிராம ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு-செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை மாநகர எல்லைக்குள் வரும் பகுதிகளில் முழு ஊரடங்கு.

*கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழுஊரடங்கு.

நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவு.

மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு-கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு.

*சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி- முதல்வர் பழனிசாமி.

*கோயம்பேடு வணிக வளாகம் வழக்கம் போல் செயல்படும் - சிஎம்டிஏ நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் அறிவிப்பு!

*கோவை : குனியமுத்தூர் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையம் தற்காலிக மூடல் காவல் நிலையம் தற்காலிகமாக திருமண மண்டபத்தில் செயல்படும் என அறிவிப்பு.

*திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம். - மாவட்ட ஆட்சியர்.

*கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் வறண்ட வானிலை காணப்படும். - சென்னை வானிலை ஆய்வு மையம்.

*தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 10 பேர் டிஸ்சார்ஜ்.

*குன்றத்துரில பழ வியாபாரி மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

கோயம்பேடு வணிக வளாகத்தில் பழங்களை கொள்முதல் செய்து குன்றத்தூரில் வியாபாரம் செய்து வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவர் குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கும் பாதிப்பு உருவானது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து - சுகாதார துறை.

வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க உத்தரவு. கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் சுகாதார துறை உத்தரவு.

*திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம். - மாவட்ட ஆட்சியர்.

*ஜூன் 30 வரை பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்- உத்திரப்பிரதேச அரசு:

அதிகாரிகளுக்கு உ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு.
சூழ்நிலையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்- உ.பி.முதல்வர்.

*1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் - முதல்வர் பழனிசாமி.

*ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு உடனடியாக பணியில் சேருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

*சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலி:
அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு
ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கும் பணியும் நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு. - சென்னை மாநகராட்சி.

*விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க அரசு நடவடிக்கை.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரி நியமனம்- தமிழக டிஜிபி.

வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமனம்.விவசாயிகள் தொடர்பு கொள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியீடு.

*இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் மொத்தம் 41 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது -அமைச்சர் விஜயபாஸ்கர்.

*குன்றத்தூரை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர் கொரோனாவுக்கு பலி!

*திருவாரூர், அரியலூர், கடலூர், நாகை மாவட்டங்களில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

*மராட்டிய மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த 96 பேருக்கு கொரோனா வெருவி தொற்று உறுதி!
மராட்டிய மாநிலத்தில் இதுவரை 15 அதிகாரிகள் உட்பட காவல்துறையில் பணிபுரியும் 96 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*மிகக் குறைந்த நாட்களில் நமது ஆய்வுத் திறனை நூற்றுக் கணக்கில் இருந்து 7,700 ஆக உயர்த்தியுள்ளோம். இன்னும் சில நாட்களில் ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யும் திறனை உயர்த்த் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. - அமைச்சர் விஜயபாஸ்கர்

*தமிழகத்தில் COVID19 பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 34லிருந்து 41ஆக அதிகரிப்பு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு COVID19 பரிசோதனை அதிகம் பெற்றுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்

*சென்னை ராஜீவ் காந்தி மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த 8 மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் இன்று மீண்டுள்ளார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நலம் பெற்ற 6 மருத்துவர் ஒரு செவிலியர் ஊனீர் (Plasma) மருத்துவ முறைக்கான  இசைவு தெரிவித்துள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

*விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(26.04.2020) ஒரு நாள் முழு ஊரடங்கு

மருந்துக் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும்.பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
- ஆட்சியர் அண்ணாதுரை

*கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா ரத்து - கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அறிவிப்பு.
மாண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மட்டும் கோயிலில் மே 8 ல் நடைபெறும். மே 8 மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை இணைய வழியாக பக்தர்கள் நிகழ்ச்சியை பார்க்கலாம்.

*'மதுரையில் காய்கறி சந்தை, மளிகைக்கடைகள் செயல்படத் தடை':

மதுரையில் முழு ஊரடங்கு காலத்தில் தற்காலிக காய்கறி சந்தை, மளிகைக்கடைகள் செயல்படத் தடை.
மதுரை மாநகராட்சியில் பழக்கடைகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் செயல்படவும் தடை. - ஆட்சியர் வினய்.

*'புதுச்சேரி நகரம் முழுவதும் மின் தடை':

மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் புதுச்சேரி நகர பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages