கொரோனா தொற்று அதிகரிப்பது கவலையளிக்கிறது. கொரோனா ஒழிப்பு போரில் ஒவ்வொருவரும் கொரில்லாப் போர் வீரர்களாக (வீட்டுக்குள்ளேயே) இருந்து வெற்றி பெற வேண்டும்-ஜி.கே.மணி. - Agnipuratchi

கொரோனா தொற்று அதிகரிப்பது கவலையளிக்கிறது. கொரோனா ஒழிப்பு போரில் ஒவ்வொருவரும் கொரில்லாப் போர் வீரர்களாக (வீட்டுக்குள்ளேயே) இருந்து வெற்றி பெற வேண்டும்-ஜி.கே.மணி.

Share This

கொரோனா தொற்று அதிகரிப்பது கவலையளிக்கிறது. கொரோனா ஒழிப்பு போரில் ஒவ்வொருவரும் கொரில்லாப் போர் வீரர்களாக (வீட்டுக்குள்ளேயே)  இருந்து  வெற்றி பெற வேண்டும்-ஜி.கே.மணி.         
-—————— -—————— -——————
        
கொரோனா தொற்று ஒழியும், ஊரடங்கு முடிவு பெறும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு அளவிலும் சென்னையிலும் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த வேதனையும் கவலையும் அளிக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 1755 பேர். நேற்று மட்டும் 72 பேர். சென்னையில் மிக அதிகம் நேற்று 52 பேர். கொரோனாவை ஒழிக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.         
          
கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தினரும் கொரில்லாப் போர் வீரர்களாக இருந்து  களம் காண வேண்டும். இப்போரில் கொரில்லாப் போர் வீரர்கள் என்பது அனைவரும் தான். வீட்டுக்குள்ளிருப்பதுதான். அரசு அறிவித்ததற்கு மேலேயும் பாதுகாப்பாக, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் மிக மிக முக்கியம். உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.                   
         
மிக மிக அத்யாவசியத் தேவைக்கு வெளியே செல்வோர் கட்டாயம் முகக் கவசம் (மாஸ்க்) அணிவது, 3 அடி இடைவெளியை கடைபிடிப்பதில் மறதியோ, மீறுதலோ கூடாது. வீட்டுக்கு வந்தவுடன் முகம், கை, கால் கழுவுவதை தவறக் கூடாது. வேலையிழப்பும் வீட்டிலிருப்பதும் கடினம்தான் என்றாலும் நிலைமையை உணர்ந்து கொள்வதே முக்கியம். கொரோனா ஒழியும். நாம் சாதிக்க உள்ளோம் என ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் இருங்கள்.       

பாதுகாப்பாக இருங்கள்... பதட்டப்படாமல் இருங்கள்...
பக்குவாய் இருங்கள்...       
அவசரம் வேண்டாம் ...
அச்சம் வேண்டாம் ...
அலட்சியம் வேண்டாம்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages