அக்னிப்புரட்சி (26.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்
* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,03,269ஆக உயர்வு.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,20,914ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,36,707ஆக உயர்வு.
அமெரிக்காவில் புதிதாக 30,570 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9,60,651 ஆக உயர்வு.
*இந்தியாவில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,917 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 826 ஆக உயர்வு.
குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,914 ஆக உயர்வு.
*தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி:
தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதி.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,885ஆக உயர்வு- சுகாதாரத்துறை.
தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்வு. மதுரையில் 15, விருதுநகரில் 7, நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதி
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 60 பேர் குணமடைந்தனர்- சுகாதாரத்துறை.இதுவரை 1020 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்- சுகாதாரத்துறை.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி - இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு.
*சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை சென்னை அடையார், மத்திய கைலாஷ், திருவான்மியூர்,பெசன்ட் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, உள்ளிட்ட பல பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
*'அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு':
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சென்னையை ஒட்டியுள்ள பகுதிகள் தாம்பரம், பல்லாவரம், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், பொன்னேரியில் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
*15-வது நிதிக்குழுவின் சாதக பாதகங்கள் குறித்து நிதிநிலை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
*தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரூ.4,025 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்க நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.
*தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தை முழுமையாக அதிமுக அரசு பெற்றுத் தரும்.
*கொரோனா தடுப்பு நேரத்தில் தேவையில்லாத சர்ச்சையை ஸ்டாலின் கிளறி உள்ளார் - துணை முதலமைச்சர்.
*சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தொடர வாய்ப்பு!:
*தமிழக உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று , இடி - மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
*கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்கும் பணியில் முதல்வர் எடுக்கும் முடிவுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
*தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,24,269 பேர் கைது:
3,06,339 பேர் மீது வழக்குப்பதிவு- 2,76,183 வாகனங்கள் பறிமுதல்.
ரூ. 3.27 கோடி அபராதம் விதிப்பு.
*நெல்லை : விக்கிரமசிங்கபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது - கடந்த 2 மாதத்தில் பிடிபட்ட 3வது சிறுத்தை இதுவாகும்.
*விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி - மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு":
கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை - தமிழக அரசு.
பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு".
காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து - தமிழக அரசு.
விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும்.
வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து - முதலமைச்சர்.
*கொரோனாவால் உயிரிழந்து நல்லடக்கம் செய்யப்பட்ட மருத்துவரின் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை. - சென்னை மாநகராட்சி.
*சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்:
*சென்னையில் எழிலகத்தை தொடர்ந்து கோயம்பேட்டில் கொரோனா தடுப்பு பணி குறித்து மத்திய குழு ஆய்வு!
முன்னதாக எழிலகத்தில் உள்ள தரவு பகுப்பாய்வு மையத்தில் 5பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியது!
*சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 931 பேருக்கு கொரோனா வெருவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் சிங்கப்பூர் குடிமக்கள் / நிரந்தர குடியுரிமை பெற்ற 15 பேரை தவிர மீதம் உள்ள அனைவரும் வெளிநாட்டு பணியாளர்கள். 12 உயிரிழப்புகள் உட்பட இதுவரை அங்கு 13,624 பேருக்கு பாதிப்பு.
*புதுச்சேரி மக்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமை: முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி மக்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று புதுச்சேரியில் மேலும் பரவாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
*நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் ஸிங்க் (zinc) மாத்திரைகள் வழங்கப்படும். ஸிங்க் (zinc) மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகள் நாளைமுதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும் - தமிழக அரசு.
*சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவருக்கு கொரோனா உறுதி ஆந்திராவை சேர்ந்த நபர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வந்த இடத்தில் கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு.
*கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
- சென்னை வானிலை ஆய்வு மையம்.
*குர்கானில் கொரோனா பரவல் காரணமாக எம்.என்.சி., ஐ.டி, பி.பி.ஓ. போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகள் ஜூலை 31ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என ஹரியானா மாநில அரசின் உயரதிகாரி உத்தரவு.
No comments:
Post a Comment