ஊரடங்கு தளர்த்தப்படுமா? நாளை (ஏப். 27) முக்கிய முடிவு
புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கை மே. 3 வரை நீட்டித்துள்ள நிலையில்,பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் மூன்றாவது முறையாக நாளை ( ஏப். 27) வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ், இந்தியா முழுதும் வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரசால் இதுவரை , 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 750 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும், மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை வருகின்றன.
தற்போது நாடு முழுதும் ஊரடங்கு மே. 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், கடந்த ஏப். 2 மற்றும் 11-ம் தேதி என இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நாளை( ஏப். 27-) மாநில முதல்வர்களுடன் மீண்டும் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இரண்டாவது ஊரடங்கு காலம் நிறைவடைய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் நாளை நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி ஊரடங்கை தளர்த்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment