அரசின் முயற்சிகளுக்கு பெயர் வாங்க விரும்பும் சோனியா: - பிரகாஷ் ஜவடேகர் - Agnipuratchi

அரசின் முயற்சிகளுக்கு பெயர் வாங்க விரும்பும் சோனியா: - பிரகாஷ் ஜவடேகர்

Share This

அரசின் முயற்சிகளுக்கு பெயர் வாங்க விரும்பும் சோனியா: - பிரகாஷ் ஜவடேகர்

புதுடில்லி: மத்திய அரசின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு, தினமும் கடிதம் எழுதும் காங்., தலைவர் சோனியா, அரசின் முயற்சிகளுக்கு பெயர் வாங்க விரும்புகிறார் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில், இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) நிலை குறித்தும் அவை புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தும் பிரதமர் மோடிக்கு, காங்., தலைவர் சோனியா கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

சோனியா, மத்திய அரசிற்கு தினமும் கடிதங்களை எழுதி வருகிறார். அவரும், காங்கிரஸ் கட்சியும் களத்திற்கு சென்று ஏதாவது வேலை செய்ய வேண்டும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் சில நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளதை அறிந்து கொண்டு, தன்னாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என நிரூபிக்க சோனியா கடிதம் எழுதினார்.

அரசின் முயற்சிகளுக்கு அவர் பெயர் வாங்க விரும்புகிறார்.

குறு, சிறு, நடுத்தர தொழில்துறைகளை மோடி அரசு கவனித்து வருகிறது.

நாங்கள் 14 கோடி மக்களுக்கு எந்தவிதமான பிணையுமின்றி கடன்களை வழங்கியுள்ளோம்.

அவர்கள் அதைப் பற்றி விவாதிக்கவில்லை, ஆனால் எப்போதும் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து உழைக்கிறோம்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கான அரசின் முயற்சிகளை காங்., ஏற்றுக்கொள்ளவில்லை.

ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளுக்கு ரூ.1.70 லட்சம் கோடியை வழங்கியுள்ளது.

20 கோடி பெண்களுக்கு தலா ரூ.500 வழங்கியுள்ளோம், அது மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குகிறோம். இந்த திட்டங்களை எல்லாம் காங்., கருத்தில் கொள்ளாமல், அரசியல் செய்கிறது.

கொரோனாவுக்கு எதிராக முழு நாடும் ஒன்றாக நிற்கும் நேரத்தில் காங்., கட்சி மட்டும் அரசியல் செய்து வருகிறது.

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல, கொரோனாவை எதிர்த்துப் போராட நாம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages