அக்னிப்புரட்சி (28.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது.
கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,21,147 ஆக உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,11,431 ஆக உள்ளது.
*அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது.
கொரோனாவால் அமெரிக்காவில் 56,796 பேர் பலியாகிவிட்டனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,303 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு, 51 பேர் உயிரிழப்பு.
மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் : 29,974,
குணமடைந்தவர்கள் : 7,027
இறந்தவர்கள் : 937
*தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது.
தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி.
தமிழகத்தில் கொரோனா பாத்திதவர்களின் மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில், இன்று சென்னை 103, செங்கல்பட்டு 12, நாமக்கல் 2 , கள்ளக்குறிச்சி 3, காஞ்சிபுரம் 1 ஆகிய 5 மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு..
தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு.
செங்கல்பட்டில் பிறந்து 5 நாளே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!.
*சிவப்பு பகுதி - அதிரடி தடை:
திண்டுக்கலில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 42 பேர் வெளியே செல்ல தடை.
மறு உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு வெளியே வர கூடாது என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
பாலகிருஷ்ணாபுரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 42 பேர் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக வெளியே செல்லும் போது நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தடை விதிப்பு.
*புதுச்சேரியில் வெளி மாநிலங்களில் இருந்து நடைபயணமாக வந்தவர்களை அனுமதிக்கக் கூடாது என கிரண் பேடி அறிவித்ததை எதிர்க்கிறேன். ஏனாம் எல்லையில் தடுக்கப்பட்டவர்களை அனுமதிக்காவிடில் பதவி விலகுவேன்.
- அமைச்சர் மால்லாடி கிருஷ்ணா ராவ்.
*கொரோனா தடுப்புப் பணியிலுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது. - முதல்வர் பழனிசாமி.
கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத் தனமாக இருக்கிறார்கள்.
காய்கறி சந்தைகளில் தனி மனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை.
பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்.
வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். -முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
*சென்னை கோயம்பேடு சந்தை - புதிய கட்டுப்பாடு:
கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகளுடன் கடைகளுக்கு அனுமதி கோயம்பேடு சந்தையில் 1900 மொத்த விற்பனை கடைகளில் 600க்கு மட்டுமே அனுமதி.
அமைந்தகரையில் 450 சில்லறை விற்பனை கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி.
கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது எதிரொலி. இன்று நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு.
*மாநகராட்சியின் முடிவை மொத்த வியாபாரிகள் ஏற்றுக் கொண்டதாக தகவல். மாநகராட்சி நிபந்தனையை ஏற்க சிறுவியாபாரிகள் மறுப்பு.
கோயம்பேட்டில் உள்ள 1500 சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்படும் என அறிவிப்பு.
*ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை:- முதலமைச்சர் பழனிசாமி.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை:
காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்று சிறப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்,
மே 3க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாக தகவல்.
ஊரடங்கை கடுமையாக்குவதா? தளர்த்துவதா? என முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
*சென்னை: நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு.
*கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை!
கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை!"
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்!
*அரசு ஊழியர்களின் மாத சம்பளம் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்திற் குரியது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது.
அரசின் நடவடிக்கை ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும். அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பு உரிமை ரத்து போன்ற அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
*தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
*இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி. இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்.
*துறைமுக பணியாளர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் இழப்பீடு -மத்திய அரசு.
*தஞ்சை பெரிய கோயில் பற்றிய ஜோதிகாவின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா பதில். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கான காணிக்கை என்பதை பல பெரியவர்கள் வலியுறுத்தியிருக் கிறார்கள்.
நல்லோர் சிந்தனைகளை செவி கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரியாது. பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் இருக்கும் இடமாக கருத வேண்டும்.
கொரோனா பாதிப்பு காலத்தில் ஜோதிகாவுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது.
ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஜோதிகா எப்போதோ பேசியதை இப்போது பெரிதாக்குவது ஏன்?-சூரியா.
*சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது - ஐசிஎம்ஆர். தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது - ஐசிஎம்ஆர்.
*கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது ஈரோடு.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரும் குணமாகி வீடு திரும்பினர்.
கொரோனா சிகிச்சை பெற்று வந்த கடைசி 4 பேரும் குணமாகி வீடு திரும்பினர்.
*சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் வரத் தடை!
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் வரத் தடை!
சென்னை கோயம்பேடு பூச்சந்தையில் வியாபாரிக்கு கொரோனா உறுதியானதால் பொதுமக்கள் வரத் தடை
*சிறிய அளவிலான கொரோனா அறிகுறி இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்- மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல். வீட்டில் தனிமைப்படுத்தி கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு.
*கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை - சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்கள் தடை.
அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி.
இயல்புநிலை திரும்பும் வரை கட்டுப்பாடுகள் தொடரும் - கார்த்திகேயன்.
*டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார்.
*தத்தளிக்கும் மும்பை தாராவி!
"சின்னத் தமிழகம்" என்று அழைக்கப்படும் மும்பை தாராவியில் இன்று மட்டும் 4 பேர் கொரோனா வெருவித் தொற்றால் உயிரிழப்பு.
இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தாராவியில் மட்டும் மொத்த பாதிப்பு 330ஆக அதிகரித்தது. உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது
*சென்னையில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு PCR சோதனை செய்ய அனுமதி வழங்கியது தமிழக அரசு
அரசு அனுமதித்துள்ள தொகையான PCR சோதனை செய்ய ₹3750 மட்டுமே கட்டணமாக ஏற்க வேண்டும் என ஆணை
No comments:
Post a Comment