நமது சமூக ஊடகப் பேரவையின் மூலம் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த முடியும். இதற்கு ஊரடங்கு காலம் சாட்சி - பாமக தலைவர் ஜி. கே. மணி
நமது சமூக ஊடகப் பேரவையின் மூலம் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த முடியும். இதற்கு ஊரடங்கு காலம் சாட்சி என்பதை நேற்று (27.4. 2020) இலட்கணக்கில் "டுவிட்" பதிவிட்டது மக்கள் மத்தியில் கருத்தொற்றுமையை உருவாக்கு உள்ளது.
"டுவிட்" பதிவிட்டவர்கள் அனைவருக்கும் நேற்று பாராட்டும் வாழ்த்தும் தெரிவித் திருந்தேன். இன்று நிறைய பேர் செல்பேசியில் தொடர்புகொண்டு இதற்கு நம்பிக்கை தெரிவித்து, வரவேற்றுப் பேசினார்கள். இந்த வரவேற்புக்கு காரணமான நேற்று "டுவிட்" பதிவிட்ட அனைவருக்கும் மீண்டும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
நமது சமூக ஊடக பேரவையில் உள்ளவர்களுக்கும் இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். - பாமக தலைவர் ஜி. கே. மணி
No comments:
Post a Comment