தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் பழனிசாமி. - Agnipuratchi

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் பழனிசாமி.

Share This

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் பழனிசாமி.

ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி விலையின்றி வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்- தமிழக முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்.

பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை. பேக்கரி உள்ளிட்ட உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.

ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலைபேசி மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

விழித்திருங்கள் - விலகியிருங்கள் -வீட்டிலிருங்கள் என்ற கோட்பாட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஊரடங்கு நீட்டிப்பு. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages