அக்னிப்புரட்சி (14.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.
எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்- பிரதமர் மோடி.
*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 30 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.
*மகாராஷ்டிரா: மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் கொரோனா பாதிப்பு 55ஆக உயர்வு
*மே 1 பொது விடுமுறை மே 2&3 சனி ஞாயிறு கிழமைகள் என்பதால் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக பிரதமர் அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாநிலங்கள் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இருந்த நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு விளக்கம்
*ரயில் சேவையும் மே 3 வரை ரத்து!:
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ரயில் சேவை ரத்தும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பு - ரயில்வே அறிவிப்பு.
*கோவையில் காவல்துறையினருக்கு உணவு வழங்கிவந்த 61 வயது தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு.
*முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம். சென்னையில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதிக்கின்றனர். முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 179 -ன் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவு.
*"ரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்; நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு மட்டும் பொருட்கள் விநியோகிக்க வேண்டும்!
- கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை.
*ஊரடங்கு நீட்டிப்பால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவை மே 3ஆம் தேதி வரை ரத்து.
*அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள்... இதுவும் கடந்து போகும்.
நாட்டு மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்!
*தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு:
1,48,342 வாகனங்கள் பறிமுதல்.
ரூ.76,96,544 அபராதம் வசூல்.
1,75,238 வழக்குகள் பதிவு.
- தமிழக காவல்துறை.
*தமிழகத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் இலங்கையில் சிக்கி தவிப்பு நாடு திரும்ப முடியாமல் 20 நாட்களுக்கும் மேலாக விமான நிலையப் பகுதியில் தவிப்பு.
சரியான உணவு கிடைக்காமலும், நாடு திரும்ப வழி தெரியாமலும் தவிக்கும் அவலம். தங்களை உடனடியாக மீட்க வாட்ஸ் ஆப் மூலம் கோரிக்கை.
*நாடு முழுவதும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு.
*ஊரடங்கில் மீன் பிடித்தலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்கலாம் - தமிழக மீன்வளத்துறை அறிவிப்பு.
நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லை.
*தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான குறைகளைத் தீர்க்க 20 கட்டுப்பாட்டு மையம். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தகவல். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தொழிலாளர்களின் பிரச்சினைகளை களைய மத்திய அரசு நடவடிக்கை.
*கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்கும்.
ஊரடங்கு முடிந்து மே 3க்கு பின் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நிவாரணம் வழங்குவார்கள்- விஜயகாந்த்.
*மதுபான கடைகள் திறக்கப்படாது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க தடை - அமைச்சர் தங்கமணி.
*கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க தாமதம் செய்ததால் இந்தியாவுக்கு மிகவும் பின்னடைவு.
இந்தியாவில் 10 லட்சம் பேரை பரிசோதிக்க 149 பரிசோதனை கருவிகளே இருக்கின்றன - ராகுல் காந்தி.
*சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.
கடலூர் அருகே ஆலப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
*ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது:
ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,502-ஆக நிர்ணயம்.
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 36,016 ஆக நிர்ணயம்.
அடுத்த மாதம் ஒரு கிராம் ரூ. 5,000-ஐ நெருங்கும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி தகவல்.
*சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டம். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லை எனக்கூறி தொழிலாளர்கள் போராட்டம்.
*கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய டெல்லி இளைஞர் பிடிபட்டார். செங்கல்பட்டு அருகே படாலம் பகுதியில் விழுப்புரம் போலீசார் சுற்றிவளைத்தனர். விழுப்புரம் முதல் சென்னை வரை 3 மொழிகளில் போஸ்டர் ஒட்டி போலீசார் தேடி வந்தனர்.
*டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் சிகிச்சை பெற்றவர்களிடம் இருந்து கொரோனா பறவி இருக்கலாம் என தகவல்
சிகிச்சை பெற்றவர்களை அறியும் பணி தொடங்கியது
*ஒவ்வொரு காவலரும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்றிட வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது.
உங்களது மோசமான நாட்களை, சிறந்த நாட்களாக மாற்ற கடுமையாக செயல்பட்டாக வேண்டும் - டிஜிபி திரிபாதி.
*பாந்த்ரா போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு:
பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம் , தடியடி கவலை அளிக்கிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும். மகாராஷ்டிரா அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் - அமித்ஷா.
*'பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு' ஏப்ரலில் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு. ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்.
- பாரதியார் பல்கலைக்கழகம்.
*உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,25,000 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 19,80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,66,000 மேலும் 51,740 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 10,815 ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,190 ஆக உயர்வு-சுகாதார அமைச்சகம்.
* தமிழகத்தில் இன்று கொரோன பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 இதனோடு சேர்த்து மொத்தம் கொரோன பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு. பத்து வயது உட்பட்ட குழந்தைகள் 33 பேர்
No comments:
Post a Comment